• Breaking News

    திருகோணமலை நகர்பகுதியில் கட்டாக்காலி மாடுகளுக்கு தடை | Trincoinfo


    திருகோணமலை நகர்பகுதியில் கட்டாக்காலி மாடுகள் திரிவதால் அண்மையில் பல விபத்துக்கள் ஏற்பட்டது. இதனால் திருகோணமலை பொலிசாரின் ஒத்துழைப்புடன் 2019.12.18ம் திகதி 2019.12.19ம் திகதி ஆகிய இரு தினங்களும் இரவில் பாதையில் திரிந்த 23 மாடுகள் பிடிக்கப்பட்டு திருகோணமலை நகராட்சி மன்ற மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள மழையருவி வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளன. இம்மாடுகளின் உரிமையாளர்கள் தமது மாட்டின் அடையாளத்தை குறிப்பிட்டு கடிதமொன்றை பொலிஸ் நிலையத்திற்கு சமர்ப்பித்து, பொலிஸ் நிலையத்தால் அம்மாடுகளை விடுவிக்குமாறு எமக்கு கடிதம் மூலம் வழங்கும் அறிவுறுத்தலுக்கமைய மாடுகள் விடுவிக்கப்படும்.
    அதே வேளை தொடர்ந்து பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, மேலும் நகராட்சிமன்றத்தில் மாடுகளை விடுவிப்பதற்கு பிடிகாசு 500 ரூபாவும், தண்டப்பணம் 3000 ரூபாவும் ஒரு நாளைக்கு மாட்டிற்கான தீனி வைப்பதற்கான செலவு 300 ரூபாவும் அறவிட்ட பின்னரே மாடுகள் விடுவிக்கப்படும்.
    இந்நடவடிக்கை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்பதை நகராட்சிமன்றம் அறியத்தருகின்றது.
    உரிமைகோரப்படாத மாடுகள் சபையின் அனுமதியுடன் ஏலத்தில் விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    தலைவர்
    நகராட்சி மன்றம்
    திருகோணமலை.