Ticker

6/recent/ticker-posts

திருகோணமலை நகரசபையால் இரண்டாம் கட்ட காபட் - தெரிவு செய்யப்பட்ட வீதிகளின் விபரம்

திருகோணமலை நகரசபையால் இரண்டாம் கட்ட காபட் வீதி (அஸ்போல்ட்) போடுவதற்கு பின்வரும் வீதிகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றிற்கான கேள்விகள் கோரப்பட்டிருந்தது.
1.கன்னியா முதலாம் வீதி அன்புவழிபுரம் – 420m நீளம்
2.புனித மரியாள் வீதி – 280m நீளம்
3.நீதிமன்ற வீதி – 560m நீளம்
4.ஜமாலியா பிரதான வீதி – 235m நீளம்
5.கோணேசபுரி பிரதான வீதி, உவர்மலை – 440m நீளம்
6. இதுவரை அமைக்கப்பட்ட காபட் வீதிகளின் இருமருங்கிலும் வெள்ளைக்கோடு இடல்.
கேள்வி சபையால் 2019.12.04ம் திகதி அன்று கிடைக்கப்பெற்ற கேள்விகள் ஆராயப்பட்டது.
விபரங்கள் வருமாறு.
05 வீதிகளுக்கான நகரசபையின் மதிப்பீடு ரூபா. 20,463,919.83
முதலாவது கேள்விதாரரின் கேள்வித்தொகை. ரூபா.22,006,925.00
இரண்டாவது கேள்விதாரரின் கேள்வித்தொகை. ரூபா. 19,007,161.63
மூன்றாவது கேள்விதாரரின் கேள்வித்தொகை. ரூபா.18,419,994.35
எனவே ரூபா.18,419இ994.35 கேள்வித்தொகை கூறியுள்ளவருடன் ஒப்பந்தம் வழங்குவதற்கு கேள்வி சபையால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
காலநிலை சீரானதும் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
News by நகராட்சி மன்றம் திருகோணமலை FB
இரண்டாம் கட்டமாக காபட் (அஸ்போல்ட்) இடுவதற்கு தெரிவு செய்யப்பட்ட வீதிகளின் விபரம் படத்தில் காட்டப்பட்டுள்ளது.