• Breaking News

    சும்மா இருக்கும் இளைஞர்கள் செய்ய வேண்டிய தொழில் ஆலோசனைகள்



    1. ஒரு பொருளை விற்பனை செய்யும் திறமை உலகிலே அபார திறமையாகும். வாடிக்கையாளரை திருப்திபடுத்தி அவர்களை கொள்வனவு செய்ய வைக்கும் வரையில் பேசும் யுக்திகள் ஒவ்வொருவருக்கும் இருந்தால் உழைக்கலாம்.

    2. விற்பனை செய்ய கடையில் வேலை செய்ய வேண்டியதில்லை. மொத்த வியாபாரிகளிடம் சிறிய தொகையை ஆதாரமாக கொடுத்துவிட்டு நீங்கள் உங்கள் முயற்சியில் இறங்கலாம். உங்கள் இருப்பிடத்தில் இருந்தே விற்கலாம்.

    3. நீங்கள் தெரிவு செய்யும் பொருள் உங்களுக்கு இலாபகரமாக இருக்க வேண்டும். பலர் இன்று ஒன்லைன் பொருட்களை நம்பி வாங்குகின்றார்கள். பலரும் ஏமாறுகின்றார்கள். காரணம் கவர்ச்சியும் விளம்பரமும்.

    4. நீங்கள் முகநூல் குழுமங்களில் மொத்த வியாபார குழுமங்களை அவதானித்து பார்த்தால் மிக மலிவாக சில உற்பத்திகள் சிங்கள பகுதிகளில் கிடைக்கும். அதனை வாங்கி விற்பதால் உங்கள் பகுதியில் நல்ல இலாபமும் கிடைக்கும்.

    5. வெளிநாடுகளில் இறக்குமதி செய்து விற்பனை செய்வோரின் பொருட்களை நீங்கள் தனியாக முயற்சி செய்து விற்பனை செய்யலாம்.

    6. உங்கள் முகநூலை விளம்பர தளமாக பயன்படுத்தி தொழிலை செய்யுங்கள்.

    7. வாகனங்களை வாங்கி விற்பனை செய்வதும் இலாபம் தரும்.

    8. பண்ணை விலங்குகளை வாங்கி விற்கலாம். குஞ்சுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம். இது தொடர்பில் அனுபவமில்லை என்றால் கற்றுக்கொண்டு செய்யுங்கள். மாறாக காசை கரியாக்கிக் கொள்ளாதீர்கள்.

    9. கோழி வளர்ப்பு இலாபகரமான ஒரு தொழில். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் வளர்த்து விற்பது சொற்ப இலாபத்தை தான் தரும்.

    10. திருமண நிகழ்வு தொடர்பான சேவைகள் நல்ல வருமானம் தரும். பத்திரங்கள் வாடகைக்கு கொடுப்பது. மணப்பெண் அலங்கார சேவை. மணப்பெண் புகைப்படக்கலை, விருந்துபசார சேவை. என பல தொழில்கள் இதனோடு பிணைக்கப்பட்டுள்ளன.

    இன்னும் பல உள்ளன. எனவே இளைஞர்கள் உங்கள் திறமைக்கு ஏற்ற ஒரு துறையை நீங்களே தெரிவு செய்து அதற்காக உங்களை அர்ப்பணித்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும் ஆழமாக இருக்கும் போது நிச்சயம் வெற்றியோடும் வருமானமும் அள்ளும்.

    சும்மா போனை வைத்து கொண்டும் தெருவில் நின்று கைவாறு அடித்துக்கொண்டும் இருப்பதால் ஒரு ரூபா அளவில் கூட வருமானம் பெற முடியாது.

    இப்படி எல்லாம் பலர் இருந்தாலும் கடைசியில் வெளிநாடு கைகொடுக்கும் அங்கிருக்கும் மாமா உதவுவார் என்று நம்புகின்றனர். கடைசியில் மாமாவுக்கே வெளிநாட்டு பாய் காட்டிவிடுகின்ற நிலையில் இன்றைய வெளிநாடு உள்ளது.

    எனவே உங்கள் சுயத்தை விட்டுகொடுக்கமால் தைரியமாக முடிவெடுத்து முயற்சியுங்கள்.

    கஞ்சிக்கடை என்றாலும் குடிக்க ஆட்கள் வராமலா போவார்கள்...?