• Breaking News

    வரலாற்றில் இன்று 27.12.2019


    டிசம்பர் 27 கிரிகோரியன் ஆண்டின் 361 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 362 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் நான்கு நாட்கள் உள்ளன
    நிகழ்வுகள்
    537 – ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது.
    1703 – இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கு ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது.
    1831 – சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
    1836 – இங்கிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான புயல் சசெக்ஸ் நகரில் இடம்பெற்றது. 8 பேர் கொல்லப்பட்டனர்.
    1845 – பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.

    1864 – இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.

    1911 – இந்தியாவின் தேசியப் பண் ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் இசைக்கப்பட்டது.
    1918 – ஜேர்மனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.
    1922 – ஜப்பானின் ஹோஷோ உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவிக்கப்பட்டது.
    1923 – ஜப்பானிய மாணவன் ஒருவன் இளவரசர் ஹிரோஹிட்டோவைக் கொல்ல முயற்சித்தான்.
    1934 – பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது.
    1939 – துருக்கியில் ஏர்சின்கன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
    1945 – 28 நாடுகளின் ஒப்புதலுடன் உலக வங்கி உருவாக்கப்பட்டது.
    1949 – இந்தோனீசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.
    1956 – தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
    1968 – சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
    1978 – ஸ்பெயின் 40வருட கால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் ஜனநாயக நாடானது.
    1979 – சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. அதிபர் ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.
    1985 – ரோம் மற்றிம் வியன்னா விமானநிலையங்களில் பாலஸ்தீன தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
    1996 – தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.
    1997 – வடக்கு அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து துணை இராணுவக்குழுத் தலைவர் பில்லி ரைட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    2000 – யாழ்ப்பாணம், தென்மராட்சி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற எட்டு பொதுமக்கள் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    2002 – செச்சினியாவில் மாஸ்கோ சார்பு அரச தலைமையகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 72 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமடைந்தனர்.
    2007 – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

    பிறப்புகள்
    1571 – ஜொஹான்னெஸ் கெப்லர், ஜேர்மானிய அறிவியலாளர் (இ. 1630)
    1654 – ஜேக்கப் பெர்னோலி, சுவிஸ் கணிதவியலாளர் (இ. 1705)
    1796 – மிர்சா காலிப், உருதுக் கவிஞர் (இ. 1869)
    1822 – லூயி பாஸ்டர், பிரெஞ்சு அறிவியலாளர் (இ. 1895)
    1901 – மர்லீன் டீட்ரிக், அமெரிக்க நடிகை, பாடகி (இ. 1992)

    1945 – டேவிட் ராஜேந்திரன், ஈழத்து வானொலி, மேடை நாடகக் கலைஞர் (இ. 2013)

    1965 – சல்மான் கான், இந்தி நடிகர்

    இறப்புகள்
    1922 – தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பாளி அறிஞர் (பி. 1843)
    1923 – அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், பிரெஞ்சுப் பொறியியலாளர் (பி. 1832)
    1979 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் (பி. 1929)
    2007 – பெனசீர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் (பி. 1953)