• Breaking News

    வரலாற்றில் இன்று 24.12.2019

    டிசம்பர் 24 கிரிகோரியன் ஆண்டின் 358 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 359 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஏழு நாட்கள் உள்ளன
    நிகழ்வுகள்
    1690 – யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துமஸ் இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
    1715 – சுவீடனின் துருப்புகள் நோர்வேயை ஆக்கிரமித்தன.
    1777 – கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.
    1851 – வாஷிங்டன் டிசியில் காங்கிரஸ் நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.
    1906 – ரெஜினால்ட் ஃபெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
    1914 – முதலாம் உலகப் போர்: கிறிஸ்துமஸ் தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
    1924 – அல்பேனியா குடியரசாகியது.
    1941 – இரண்டாம் உலகப் போர்: ஹொங்கொங் ஜப்பானியப் படைகளிடம் வீழ்ந்தது.
    1941 – இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் ஜப்பானியரிடம் வீழ்ந்தது.
    1951 – லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் ஐட்ரிஸ் லிபிய மன்னனாக முடிசூடினார்.
    1953 – நியூசிலாந்தில் டாங்கிவாய் என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 153 பேர் கொல்லப்பட்டனர்.
    1954 – லாவோஸ் விடுதலை பெற்றது.
    1966 – தெற்கு வியட்நாமில் அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
    1968 – மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
    1974 – ஆஸ்திரேலியாவில் டார்வின் நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
    1979 – ஆப்கானிஸ்தானின் கம்யூனிச அரசைக் காப்பதற்காக சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானை முற்றுகையிட்டது.
    1979 – ஐரோப்பாவின் முதலாவது விண்கலம் ஆரியான் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

    2005 – யோசப் பரராஜசிங்கம் படுகொலை: இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

    பிறப்புகள்
    1818 – ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல், ஆங்கில இயற்பியலாளர் (இ. 1889)
    1822 – சார்ல்ஸ் ஹெர்மைட், ஒரு பிரெஞ்சு கணிதவியலர் (இ. 1901)
    1837 – பவேரியாவின் எலிசபெத், ஆஸ்திரியா, மற்றும் ஹங்கேரியின் அரசி (இ. 1898)
    1881 – வான் ரமோன் ஹிமெனெஸ், எசுப்பானியக் கவிஞர், [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு பெற்றவர் (இ. 1958)
    1905 – ஹோவார்ட் ஹியூஸ், அமெரிக்கப் பொறியாளர் (இ. 1976)
    1924 – முகமது ரபி, புகழ் பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர் (இ. 1980)
    1944 – ஆஸ்வால்டு கிராசியாஸ், இந்தியப் பேராயர்
    1957 – ஹமித் கர்சாய், ஆப்கானிஸ்தான் குடியரசுத் தலைவர்
    1959 – அனில் கபூர், இந்திய நடிகர்
    1969 – எட் மிலிபாண்ட், பிரித்தானிய அரசியல்வாதி
    1971 – ரிக்கி மாட்டின், ஸ்பானியப் பாப் பாடகர்

    இறப்புகள்
    1524 – வாஸ்கோ ட காமா, போர்த்துக்கீச மாலுமி (பி. 1460)
    1950 – பி. ஜி. வெங்கடேசன், திரைப்பட நடிகர்
    1973 – ஈ. வெ. ராமசாமி, திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர் (பி. 1879)

    1987 – எம். ஜி. இராமச்சந்திரன், தமிழ்நாட்டின் முதலமைச்சர், திரைப்பட நடிகர் (பி. 1917)

    1997 – டோஷிரோ மிபூன், யப்பானிய நடிகர் (பி. 1920)

    2005 – ஜோசப் பரராஜசிங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் (பி. 1934)

    2005 – பி. பானுமதி, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1925)
    2008 – ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர் (பி. 1930)

    சிறப்பு நாள்
    லிபியா – விடுதலை நாள் (1951)