• Breaking News

    இலியானாவின் டூ பீஸ் பர்த்டே கிஃப்ட்... பறக்கும் ஆபாச கமென்ட்...



    கடந்த ஒரு வருடமாகவே புதிய பட வாய்ப்புகளை பெற அதீத முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் நடிகை இலியானா. எதுவும் பலனளிப்பதுபோல் தெரியவில்லை. உடல் எடையை குறைத்தார். காதலனுடன் பிரேக் அப் செய்துகொண்டு சிங்கிள் ஆனார். டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடிப்பதற்கு ஏற்ப உடற்கட்டை ஷேப்பிற்கு கொண்டு வந்தார். தனது புதிய தோற்றத்தை டூ பீஸ் அணிவதற்கு ஏற்ப ஷேப்பிற்கு கொண்டு வந்திருப்பது பற்றி பலரும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் மீண்டுமொரு முயற்சியை பிறந்த நாளில் மேற்கொண்டிருக்கிறார்.


    தன்னுடைய பிறந்த நாளன்று மீண்டும் டூ பீஸ் உடை அணிந்து, 'இதுதான் என்னுடைய அழகுமிகுந்த முக்கோண வடிவ ( டூ பீஸ்) டிரஸ். சில காலங்களுக்கு பிறகு ஃபிட்டான உடற்கட்டை தற்போது கொண்டாடி வருகிறேன்' என குறிப்பிட்டிருக்கிறார் இலியானா. தனது அழகு தோற்றத்தை தானே புகழ்ந்திருக்கும் இலியானாவை ரசிகர்களும் புகழத் தவறவில்லை. அதேநேரம் பிறந்தநாள் உடை என்றால் இப்போது இருக்கும் உடை கூட இருக்கக்கூடாதே, அந்த டூ பீஸில் ஒரு பீஸை மட்டும் அகற்றுங்கள் என்று கிக்காக ஆபாச கமென்ட்டும் பகிர்ந்திருக்கின்றனர். எல்லாவற்றையும் காதில் வாங்கிக்கொண்டு பதில் எதுவும் சொல்லாமல் அடுத்த வேலையை பார்க்கச் சென்றுவிட்டார் இலியானா.