• Breaking News

    வடக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் முரளி !


    வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் மற்றும் வடமத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
    வடக்குமாகாண ஆளுநர் பதவியை ஏற்குமாறு முரளிதரனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்டமுறையில் அழைத்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட அனுராதா யஹம்பத் தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவராகவும் புகழ்பெற்ற ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.
    வடமத்திய மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் திஸ்ஸவிதாரண முன்னாள் அமைச்சராவார்.