• Breaking News

    திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம்


    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நகரங்களை தூய்மைப்படுத்தும் செயற்திட்டத்துடன் இணைந்த விசேட வேலைத்திட்டமொன்று இன்று (26) திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது.
    ஜனாதிபதியின் பதவி ஏற்பினைத் தொடர்ந்து அவரது வழிகாட்டலில் நாட்டின் சகல நகரங்களையும் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
    இதற்கமைய பெரும்பாலான நகரங்களின் வீதிகள் சுத்தப்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதுடன், இதற்கு மக்களின் ஒத்துழைப்பும் பெருமளவில் கிடைக்கப்பெற்றிருக்கின்றமை விசேட அம்சமாகும்.
    பொலிஸ் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவின் நேரடி கண்காணிப்பில் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகர சபை ஊழியர்களின் பங்களிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தில் பிரதேசவாசிகள் பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
    இவ்வாறு சுத்தம் செய்யப்படும் சுற்றாடலை பாதுகாப்பதும் அதனை தூய்மையாக பேண வேண்டியதும் பொது மக்களாகிய எம்மனைவரதும் பொறுப்பாகுமென்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
    இதன் போது திருகோணமலை நகர சுற்று வட்ட பகுதிகளில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு, வடிகான்களும் சுத்தம் செய்யப்பட்டதோடு,நகர சபை சுத்திகரிப்பு பணியாளர்களின் உதவிகளுடன் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
    'மனிதர் நேசிக்கும் சுகாதாரமிக்க சுற்றாடலை உருவாக்குவோம்' எனும் கருப் பொருளில் திருகோணமலை பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த சிரமதான நிகழ்வில் திருகோணமலைநகர சபை, பொது சுகாதார பரிசோதகர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமூதாய பொலிஸ் குழு பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.