• Breaking News

    பாக்ஸ் ஆபிசில் தனுஷ்-ரஜினி மோதல் உறுதி?


    நடிகர் ரஜினி நடித்துள்ள தர்பார் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
    அந்த படத்திற்கு போட்டியாக தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தை களமிறக்குகிறது சத்யஜோதி நிறுவனம்.
    சென்ற வருடம் பேட்ட படத்திற்கு எதிராக விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்ததும் இதே நிறுவனம் தான்.
    விஸ்வாசம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த வருடமும் ரஜினி படத்துடன் மோதுகின்றனர். பொங்கலுக்கு தொடர்ந்து 7 நாள் விடுமுறை என்பதால் இந்த முடிவை தைரியமாக எடுத்துள்ளனர் என தெரிகிறது.