• Breaking News

    பொதுமக்களை அரச ஊழியர்கள் அலைக்கழிப்பது எவ்வாறு?


    அரச ஊழியர்கள் சாதாரண பொதுமக்களை எவ்வாறு அலைக்கழிக்கின்றனர் என்பதை உண்மை சம்பவமொன்றின் மூலம் விள்க்கியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
    நேற்றையதினம் இடம்பெற்ற புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் பதவிப் பிரமாண நிகழ்வின் பின்னர் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
    கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தனது வாக்குரிமையை பயன்படுத்த அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த நபர் ஒருவர் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்புவதற்கு தேவையான அரச நிர்வாக அலுவல்களை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அரச அலுவலகம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
    இதன்போது, அந்த காரியாலயத்தில் முதல் மாடியில் அமர்ந்திருந்த அரச அதிகாரி கையொப்பம் ஒன்றினை பெறுவதற்காக இரண்டாம் மாடிக்கு அனுப்பி வைத்துள்ளார். இரண்டாம் மாடியில் இருந்தவர் தனக்குரிய மேலதிகாரியிடம் கையொப்பம் பெற்று வருமாறு பிறிதொரு அதிகாரியிடம் அனுப்பி வைத்துள்ளார்.
    இவ்வாறு 12 கையொப்பங்களை பெறுவதற்கு அமெரிக்காவில் இருந்து வந்த குறித்த நபர் பல அதிகாரிகளை சந்திக்க முயன்ற போதிலும் அவர்கள் அனைவரும் கடமைக்கு சமூகமளித்திருக்கவில்லை.
    இறுதியாக குறித்த நபர், முதல் மாடியில் சந்தித்த அரச அதிகாரியை மீண்டும் சந்தித்து விடயத்தினை தெரியப்படுத்தியுள்ளார்.
    அனைத்து விடயங்களையும் கேட்டுக்கொண்ட குறித்த அரச அதிகாரி மேற்குறிப்பிட்ட 12 பேரின் அனுமதியின்றி தன்னாலும் கையொப்பமிட முடியாது என கூறி நிராகரித்துள்ளார்.
    மன விரக்தியடைந்த குறித்த நபர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து நடந்தவற்றை கூறி, இலங்கையில் இந்த நிலையை முற்றாக ஒழிக்குமாறு கூறியுள்ளார்.
    இந்நிலையில் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பதவிகளானது பொறுப்புக்கள் மாத்திரமேயன்றி சிறப்புரிமைகள் அல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன் போது சுட்டிக்காட்டினார்..
    news by -  ibctamil