• Breaking News

    சிங்கர் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் இன்வேர்ட்டர் குளிர்சாதனப் பெட்டிகள்


    நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையில் நாட்டில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கர், கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்ற கோலாகலமான நிகழ்வில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட, புத்தாக்கம் கொண்ட, ஆறு வகையான குளிர்சாதனப்பெட்டிகளை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.
    சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான மொஹான் பண்டிதகே, சிங்கர் ஸ்ரீலங்கா கூட்டாண்மை நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மகேஷ் விஜேவர்த்தன, சிங்கர் ஸ்ரீங்கா பீஎல்சியின் சந்தைப்படுத்தல் துறைப் பணிப்பாளரான குமார் சமரசிங்க ஆகியோர் இந்த அறிமுக வைபவத்தில் கலந்துகொண்டு தலைமை தாங்கி சிறப்பித்துள்ளனர்.
    260 முதல் 300 லீட்டர் வரையான உயர் கொள்ளளவுத் திறன், புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ள தயாரிப்பு வடிவங்களின் சிறப்பம்சமாகும்.
    inverter தொழில்நுட்பத்துடன் மின்வலுவைச் சேமிக்க உதவும் குளிர்சாதனப்பெட்டியான R600a, வழக்கமாக அதிகளவான மின்வலுவை நுகரும் இந்த வகையான குளிர்சாதனப்பெட்டிகளுடன் ஒப்பிடுகையில் மிகுந்த தனித்துவத்தைக் கொண்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியாவில் R600a தொழில்நுட்பத்தை சிங்கர் நிறுவனமே முதன்முதலில் அறிமுகப்படுத்தியிருந்ததுடன், அதன் செயல்திறன் கொண்ட மின்வலுச் சேமிப்பு சிறப்பம்சத்தால் இது மிக வேகமாக பிரபலமடைந்தது.
    குளிர்சாதனப்பெட்டி சந்தையில் சிங்கர் நிறுவனம் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதுடன், இலங்கையில் 50% இற்கும் மேற்பட்ட சந்தைப் பங்கினையும் கொண்டுள்ளது. இதற்குப் புறம்பாக முதன்முதலாக இலங்கையில் வடிவமைக்கப்பட்ட Geo ஸ்மார்ட் நுண்ணறிவு (குளிர்சாதனப்பெட்டியையும் 2018 ஆம் ஆண்டில் சிங்கர் அறிமுகப்படுத்தியிருந்தது.
    2013 ஆம் ஆண்டு முதல் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட குளிர்சாதனப்பெட்டிகளை சிங்கர் விற்பனை செய்துள்ளதையிட்டு அது பெருமை கொள்கின்றது. இதன் மூலமாக மிகுந்த திருப்தியை அடையப்பெறும் வாடிக்கையாளர்கள்,
    குறிப்பாக குறைந்தளவு மின்வலு நுகர்வுடன் இந்த குளிர்சாதனப்பெட்டிகளை உபயோகிப்பதால் கிடைக்கும் அனுகூலங்களை எடுத்தியம்பி வருவதால், சூழலுக்கு தீங்கற்ற இந்த குளிர்சாதனப்பெட்டிகளை ஊக்குவிப்பதற்கு பேருதவி புரிந்து வருகின்றனர்.