• Breaking News

    ஊழலற்ற அமைச்சரவையை தெரிவு செய்வதே புதிய ஜனாதிபதிக்கு மிகப்பெரிய சவால்- மைத்திரி

    புதிய ஜனாதிபதியாக வருபவருக்கு ஊழலற்ற அமைச்சரவையை தெரிவு செய்வதே மிகப்பெரிய சவாலாக இருக்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைகின்ற  நிலையில் இன்று (சனிக்கிழமை) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
    இதன்போது மேலும் கூறுகையில், “யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ளபோதும் விடுவிக்கப்படாது இருந்த காணிகள் என்னுடைய ஆட்சிக் காலத்திலேயே விடுவிக்கப்பட்டதை எண்ணி பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
    அதுமட்டுமல்லாமல் நாட்டில் நிலவிய பல்வேறு பிரச்சினைகளுக்கு என்னுடைய ஆட்சிக் காலத்திலேயே தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
    இதேவேளை, இந்த 5 வருடங்களில் நான் மட்டுமல்லாமல் பொதுமக்களும் எதிர்கொண்ட துயரமான வேதனையான சம்பவமாக கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலை பார்க்கின்றேன்.
    இந்த தொடர் குண்டுத் தாக்குதலை தவிர்ப்பதற்கு வாய்ப்புக்கள் இருந்தபோதிலும் அது கைநழுவியது. யாராவது என்னிடம் நீங்கள் சிறந்த ஆட்சியை செய்தீர்களா என்று கேள்வி கேட்பார்களாயின், ஆம் என்றே நான் பதில் கூறுவேன்.
    இறுதியாக எதிர்வரும் ஜனாதிபதியாக வருபவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று கூறினார்.