• Breaking News

    ஒரே திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கும் முன்னணி நாயகிகள்!


    கொரிய மொழியில் உருவாகியுள்ள திரைப்படமான “பிளைண்ட்” என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் சினிமா துறையின் முன்னணி நாயகிகள் இருவர் வெவ்வேறு மொழிகளில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதன்படி இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை நயன்தாராவும், ஹிந்தி ரீமேக்கில் சோனம் கபூரும் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    தமிழில் நயன்தாரா நடிக்கும் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்து வருவதுடன், நெற்றிக்கண் என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.