• Breaking News

    இம்முறை சனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது 2019



    எதிர் வரும் 16 ஆம் திகதி நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிக்க போகிறோம்.???
    உங்கள் அடையாளத்தை வாக்குச் சாவடியில் தெரியப் படுத்தியதும் அவர்கள் வாக்குச்சீட்டை தருவார்கள் அதை எடுத்து வாக்கு போடும் பகுதிக்கு தனியாக போய் நீங்கள் விரும்பும் முதலாவது நபரின் பெயரை தேடுங்கள் அல்லது அவர் சின்னத்தை தேடுங்கள் பின்னர், அதுக்கு நேராக இருக்கும் பெட்டியில் ( 1 ) ஒன்று என்று இலக்கம் இடுங்கள்.
    பிறகு, நீங்கள் விரும்பும் இரண்டாம் நபரை தேடுங்கள் அவருக்கு நேராக உள்ள பெட்டியில் ( 2 ) இரண்டு என்ற இலக்கத்தை இடுங்கள். அதன் பின்னர், நீங்கள் விரும்பும் மூன்றாவது நபரை தேடுங்கள் அவர் பெயருக்கு நேராக இருக்கும் பெட்டியில் ( 3 ) மூன்று என்ற இலக்கத்தை இட்டதும் சீட்டை மடித்து வாக்கு பெட்டியில் போடுங்கள்.
    இதில் மிகவும் கவனிக்க வேண்டியது விடயங்கள் இவை.
    உங்கள் வாக்குகள் செல்லுபடியாகாமல் இருக்க வேண்டும் அதுக்காக நீங்கள் இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    அ) நீங்கள் 02, அல்லது 03 ஆம் ஆளை தெரிவு செய்ய விரும்பாவிட்டால் முதலாவது நபருக்கு நேராக உள்ள பெட்டியில் ( × ) புள்ளடி இடலாம். ஏனைய இரண்டு தெரிவுகளும் இல்லாமல் சீட்டை மடித்து பெட்டியில் போடலாம் . ஆனால், இதில் ஒன்றை அறிந்து கொள்ளுங்கள் ஜனாதிபதியாக வரும் நபருக்கு 51 சதவீதம் வாக்குகள் இல்லாவிட்டால் உங்கள் இரண்டாவது விருப்ப வாக்கு அவரை தீர்மானிக்க உதவும் என்று மறந்து விட வேண்டாம்.
    ஆ) நீங்கள் மூன்று வேட்பாளருக்கு வாக்கு அளிக்க விரும்பினால் உங்கள் விருப்பதெரிவின் ஒழுங்கில் 1 ,2 ,3 என்ற இலக்கத்தை இடமுடியும்.
    இ) நீங்கள் முதலாவது இலக்கம் இடாமல்/ முதலாவது நபரை தெரிவு செய்யாமல் 02 அல்லது 03 ஆம் ஆளை தெரிவு செய்து இலக்கம் இட்டால் அந்த வாக்கு செல்லுபடி அற்ற வாக்காகும்.
    ஈ)முதலாவது வேட்பாளருக்கு ( x ) புள்ளடி இட்டு இரண்டாம் மூன்றாம் வேட்பாளருக்கு முறையே 2 , 3 இலக்கத்தையும் அளிக்க முடியும்.
    உ) நீங்கள் ஒன்று தொடக்கம் மூன்று வரைதான் இலக்கம் இடலாம் 04 மற்றும் 05 என மூன்றுக்கு மேல் அதிகமான இலக்கம் இட்டாலும் அந்த வாக்கும் செல்லுபடி அற்றது என நிராகரிக்க படும் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள் .