Ticker

6/recent/ticker-posts

வரலாற்றில் இன்று: நவம்பர் 05: 1872 -அமெரிக்காவில் வாக்களித்த பெண்ணுக்கு அபராதம்


1530 : நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது.
1556 : முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவரின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. அக்பர் இந்தியாவின் அரசரானார்.
1605 : ரொபேர்ட் கேட்ஸ்பி என்பவரால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
1814 : இலங்கையின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின.
1831 : ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் வேர்ஜீனியாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
1861 : அவுஸ்திரேலியாவில் மெல்பேர்னில் முதலாவது மெல்பேர்ன் கிண்ணக் குதிரைப் பந்தயப் போட்டி ஆரம்பமாகியது.
1862 : அமெரிக்காவின் மினசோட்டாவில் 303 டகோட்டா பழங்குடியினர் வெள்ளையினத்தவரை கொலை கெய்த குற்றத்துக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
1872: அமெரிக்காவில் பெண்கள் வாக்களிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி, வாக்களித்த சுசான் பி. அன்தனி எனும் பெண்ணுக்கு 100 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
1895 : மோட்டார் வாகனத்துக்கான முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜோர்ஜ் செல்டன் பெற்றார்.
1911 : செப்டம்பர் 29 இல் ஓட்டோமான் பேரரசுடன் இத்தாலி போரை அறிவித்த பின்னர் திரிப்போலி மற்றும் சிரெனாய்க்கா ஆகியவற்றை இத்தாலி தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1913 :  சைப்பிரசை ஐக்கிய இராச்சியம் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1917 : எஸ்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜோன் ஆன்வெல்ட் புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்பற்றினார்.
1940 : பிராங்கிளின் ரூஸ்வெல்ட் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1945 : நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.
1967 : லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
1996 : பாகிஸ்தானில்; பிரதமர் பெனாஸிர் பூட்டோ தலைமையிலான அரசாங்கத்தை ஜனாதிபதி பரூக் அஹமட் கான் கலைத்தார்.
2006 : 1982 ஆம் ஆண்டில் 148 ஷியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால ஈராக் அரசின் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனுக்கு மரண தண்டனை தீர்ப்பு அளித்தது.
2007: சந்திரனுக்கான சீனாவின் முதலாவது செய்மதியான சாங் 01 சந்திரனை வலம்வர ஆரம்பித்தது.
2009: அமெரிக்க இராணுவ மேஜர் ஒருவர்  டெக்சாஸ் நகரில் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் 13 பேர் பலியானதுடன் 29 பேர் காயமடைந்தனர்.
2013: செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான மங்கள்யான் விண்கலத்தை இந்தியா ஏவியது.
2018: கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் பிரதமர் பதவியை ஏற்பதற்கு மறுத்த பின்னரே மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக தான் நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.