• Breaking News

    வரலாற்றில் இன்று: நவம்பர் 04: 1921- ஜப்பானியப் பிரதமர் ஹரா தக்காஷி சுட்டுக் கொலை


    1576 : ஸ்பானியப் படைகள் பெல்ஜியத்தின் அண்ட்வேர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரிதும் சேதப்படுத்தப்பட்டது.
    1780: ஸ்பானிய ஆட்சிக்கு எதிராக பெருவில் கிளர்ச்சி ஆரம்பமாகியது.
    1861 : வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
    1869 : விஞ்ஞான  இதழான நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
    1914 : பிரித்தானியாவும் பிரான்ஸஷும் துருக்கிக்கு எதிராக போரை அறிவித்தன.
    1918 : முதலாம் உலகப் போரில் இத்தாலியிடம் ஆஸ்திரிய-ஹங்கேரி அரசு சரணடைந்தது.
    1918 : 40,000 கடற்படையினர் கீல் துறைமுகத்தைக் கைப்பற்றியதை அடுத்து ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது.
    1921 : ஜப்பானியப் பிரதமர் ஹரா தக்காஷி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    1956 : ஒக்டோபர் 23 இல் ஆரம்பமான ஹங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் ஹங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
    1966 : இத்தாலியின் புளோரென்ஸ் நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதி வெள்ளப் பெருக்கில் அழிந்தது. 113 பேர் கொல்லப்பட்டனர். பல பெறுமதியான ஓவியங்களும் நூல்களும் அழிந்தன.
    1967 : நடிகர் எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கில்   நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
    1979 : ஈரானிய தலைகர் தெஹ்ரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்ட குழுவினர், 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.
    1994: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் “வேர்ல்ட் வைட் வெப்” எனும் உலகளாவிய இணைய வலைப்பின்னலின் வர்த்தக ரீதியான சாத்தியங்கள் குறித்து ஆராயும் முதலாவது மாநாடு ஆரம்பமாகியது.
     1995 : இஸ்ரேலியப் பிரதமர் யிட்சாக் ரொபீன் தீவிரவாத வலதுசாரி இஸ்ரேலியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    2004 : ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12 பிரெஞ்சுப் படையினர் மற்றும் 3 ஐநா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
    2008: அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வென்ற பராக் ஒபாமா அந்நாட்டின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவானார்.
    2015: தென் சூடானில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 37 பேர் பலி.
    2015: பாகிஸ்தானின் லாகூர் நகரில் கட்டடமொன்று சரிந்ததால் 45 பேர் பலியானதுடன் சுமார் 100 பேர் காயமடைந்தனர்.