Ticker

6/recent/ticker-posts

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு | Trincoinfo

 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்று ​நேரத்திற்கு முன்னர் திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாகும்.
இந்தத் திறப்பு விழா நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு அதிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். யாழ். நகரிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பலாலி பகுதியில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.
வரலாறு
இரண்டாம் உலகப் போரின் போது யாழ்ப்பாணம் பலாலியில் விமானத் தளத்தை பிரிட்டன் விமானப் படை அமைத்தது. அதன்பின்னர் 1947ஆம் ஆண்டு டிசெம்பர் 10ஆம் திகதி தொடக்கம் கொழும்பு - இரத்மலானையிலிருந்து புறப்படும் விமானம் பலாலியில் தரையிறங்கி சென்னைக்கு பயணத்தைத் தொடரும்.
1976ஆம் ஆண்டு இலங்கை விமானப் படையின் முகாம் பலாலி விமானத் தளத்தில் அமைக்கப்பட்டது. அதனால் 1982ஆம் ஆண்டு தொடக்கம் விமானப் படைக்கு பலாலி விமானத் தளம் மாற்றப்பட்டது. 
1990ஆம் ஆண்டு பலாலி உள்ளிட்ட வலி.வடக்கு பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு லயன் எயர் நிறுவனத்தால் கொழும்புக்கான சிவில் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க,கல்வி இராஜன்க அமைச்சர் விஜயகலா ,பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா ,சுமந்திரன் ,சரவணபவன் ,சிறீதரன்,சித்தார்த்தன், என பலர் கலந்து கொண்டனர்.