Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவதன் பின்னணியை அம்பலப்படுத்தும் ஹக்கீம் | Trincoinfo



ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வேட்பாளராக ஒருவர் போட்டியிடுவதன் மூலம் முஸ்லிம் மக்களின் வாக்குகளை வேறு பக்கத்தில் திருப்புவதே நோக்கம் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதனால் இதனை தவிர வேறு நோக்கம் ஒன்றையும் பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முஸ்லிம் மக்கள் முகம் கொடுத்துள்ள சிக்கல் மற்றும் நெருக்கடியான நிலைமைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். இதங்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் எடுத்துள்ள தீர்மானத்திற்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் முஸ்லிம் மக்கள் மேலும் சிரமத்திற்கு மாத்திரமே உள்ளாகுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.