Ticker

6/recent/ticker-posts

மீண்டும் இணைந்த பாகுபலி டீம்... பிரபாஸ் வெளியிட்ட புகைப்படம்...! | Trincoinfo


இயக்குநர் ராஜமவுலி, நடிகர்கள் பிரபால், ராணா, நடிகை அனுஷ்கா ஆகியோர் லண்டன் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

இந்திய சினிமாவை உலக அரங்கில் எடுத்துச் சென்ற திரைப்படம் பாகுபலி. ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்கள் உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை குவித்தது. இந்த படம் மூலம் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஆகியோர் உலக புகழ் பெற்றனர்.

இந்நிலையில் பாகுபலி படத்தின் பிரபலங்கள் இயக்குநர் ராஜமவுலிநடிகர்கள் பிரபால், ராணா, நடிகை அனுஷ்கா ஆகியோர் மீண்டும் லண்டலின் இணைந்துள்ளனர். ஆனால் அவர்கள் இணைந்தது மற்றொரு படத்திற்காக அல்ல பாகுபலி படத்திற்காகவே.


லண்டனில் உள்ள ராயல் பெர்த் ஹாலில் இன்று நடைபெற உள்ள லைவ் ஷோவுக்காக அவர்கள் லண்டல் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது