Ticker

6/recent/ticker-posts

மீண்டும் களமிறங்கும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் | Trincoinfo



முத்தையா முரளிதரன், சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா மற்றும் சேவாக் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஒன்றிணைந்து இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

வீதிப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் இருபதுக்கு - 20 போட்டி, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி முதல் 16 வரை மும்பையில் நடைபெறவுள்ளது. 
இப் போட்டிகளில் விளையாட ஓய்வு பெற்ற 110 வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்கள். 
இந்தியாவின் மஹாராஷ்டிர அரசின் வீதிப் பாதுகாப்பு அமைப்பும் புரொபஷனல் மேனேஜ்மெண்ட் நிறுவனமும் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன. 
இந்தியா முழுவதும் அடுத்தப் பத்து வருடங்களுக்கு இப்போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் அனுமதியும் கிடைத்துள்ளது.