Ticker

6/recent/ticker-posts

பழுதூக்கும் போட்டியில் திருகோணமலை மாணவி சாதனை | Trincoiinfo

தி/செல்வநாயகபுரம் இந்து மகாவித்தியாலய மாணவி முதற்தடவை தங்கம் வென்று சாதனையை ஏற்படுத்தினார். 16.10.2019 காலை பொலநறுவையில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான பழுதூக்கும் போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்திய தி/செல்வநாயகபுரம் இந்து மகாவித்தியாலய மாணவி செல்வி என்.மிதுஷா 20 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தங்கப்பதக்கத்தை பெற்று தனது பாடசாலைக்கும் கிழக்கு மாகாணத்திற்கும், திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமையை சேர்த்து கொடுத்துள்ளார்.
 
 இவரது பயிற்றுவிப்பாளர் கே.உமாசுதன் அவர்களது சிறந்த பயிற்றுவிப்பில் தொடர்சியாக பாரம் தூக்கும் போட்டியில் திருகோணமலை மாவட்ட ஆண், பெண் போட்டியாளர்கள் அண்மையில் சாதனைகளை ஏற்படுத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இருவரையும் வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம் வாழ்த்துக்கள் .
 
செல்விஎன்.மிதுஷா மற்றும் விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர் கே.உமாசுதன் அவர்கள் திருகோணமலை வலயக்கல்வித்திணைக்கள உத்தியோகத்தர்களால் வரவேற்கப்பட்டு வாழ்த்தப்பட்டனர்.