Ticker

6/recent/ticker-posts

போட்ரா வெடிய... பிகில் ரிலீஸ் தேதி அறிவிப்பு...! | Trincinfo


பிகில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிகில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லீ- ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் கடந்த வருடத்தின் இறுதியில் துவங்கியது.


நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. இந்தியாவில் வெளியிடப்பட்ட ட்ரெய்லர்களில் யூடியூபில் அதிக லைக்குகள் வாங்கிய படம் என்கிற பெருமை பிகில் ட்ரெய்லருக்கு கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு ஷாரூக் கான் நடித்த ஜீரோ படம் யூடியூபில் 2 மில்லியன் லைக்குகளை வாங்கியது. பிகில் படம் அதைத்தாண்டி அதிக லைக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. பார்வைகளைப் பொறுத்தவரை 12 கோடியே 6 லட்சத்து 27 ஆயிரம் பெற்றுள்ளது ஷாரூக்கானின் ஜீரோ. பிகில் படம் 2 கோடியே 98 லட்சத்து 64 ஆயிரம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ட்ரெய்லரையே இப்படி கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள் படத்தைத் திரையில் காண எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் தேதி வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னதாக வெளியான தகவலின்படி அக்டோபர் 25-ம் தேதி வெள்ளிக்கிழமை பிகில் திரைப்படம் திரைக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் பிகில் படத்தின் தணிக்கை முடிவடைந்து, தணிக்கையில் இந்தப் படத்துக்கு யு/எ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதில் படத்தின் கால அளவு 2 மணி நேரம் 58 நிமிடம் 59 நொடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.