• Breaking News

    பெண்களே.. இண்டர்வியூ செல்லும்போது இப்படி உடை அணிந்து சென்றால் வேலை நிச்சயம்..!

    ஒரு வேலைக்கு புதிதாக அப்ளை செய்கிறோம் எனில் முதலில் பேசக் கூடியது நம்முடைய ரெஸ்யூம் என்றாலும் அதன் பிறகு நம்முடைய உடை மற்றும் தோற்றம் தான் முக்கிய இடம் பிடிக்கிறது. 

    ஒரு வேலைக்கு புதிதாக அப்ளை செய்கிறோம் எனில் முதலில் பேசக் கூடியது நம்முடைய ரெஸ்யூம் என்றாலும் அதன் பிறகு நம்முடைய உடை மற்றும் தோற்றம் தான் முக்கிய இடம் பிடிக்கிறது. இதை சொதப்பாமல் சிறப்பாக செய்துவிட்டால் முக்கால்வாசி கிணற்றைத் தாண்டியதற்குச் சமம். அதனால் பெண்கள் எப்படி இண்டர்வியூக்களுக்குச் செல்லும்போது உடை அணிய வேண்டும் எனப் பார்க்கலாம்.

    ஆடையில் கவனம் : தொழில் நேர்த்தியாக உடை அணிவதுதான் உங்களுக்கு வேலை மீதுள்ள பற்றை வெளிப்படுத்தும். அது காண்போருக்கு மட்டுமல்ல . உங்களுக்கு சௌகரியமாகவும் இருக்க வேண்டும். எனவே கேசுவல் உடைகளைத் தவிர்த்து குர்த்தா, ஃபார்மல் ஷர்ட் பேண்ட் இப்படி அணிந்து செல்லுங்கள்.

    அணிகலன்கள் : மினிமலிஸ்டிக் அணிகலன்களை அணிந்து செல்லுங்கள். ஹெவியான அணிகலன்கள் உங்களை தொழில் நேர்த்தியற்றவர் என்ற பிம்பத்தை உண்டாக்கும். எளிமையான அணிகலன்கள் தேர்வு உங்களுக்கு வேலையின் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தும்.

    நகப் பராமரிப்பு : இன்று நகத்திற்கு அழகு சேர்க்கும் நெயில் ஆர்ட் டிரெண்டில் இருப்பதால் பல பெண்கள் விதவிதமான நெயில் பாலிஷுகள் டிசைன்களை அப்ளை செய்கிறார்கள். மற்ற நேரங்களில் இது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்றாலும் இண்டர்வியூ செல்லும்போது பொருத்தமாக இருக்காது. எனவே பளீர் நெயில் பாலிஷுகளைத் தவிர்த்து டிரான்ஸ்பரண்ட் நெயில் பாலிஷுகளை அப்ளை செய்யுங்கள். நகங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்.

    காலணி : ஹீல்ஸ் , பிளாட் , ஃபார்மல் ஷூ என ஆடைக்கு ஏற்ப அணிந்து செல்லுங்கள். கேசுவல் ஷூ, ஸ்னீக்கர்ஸ், ஸ்லிப்பர்ஸ் இவற்றைத் தவிருங்கள். ஹீல்ஸ் அணிந்து சென்றால் அது தோற்றத்திற்கு எடுப்பாக இருக்கும்.


    மேக்அப் : இண்டர்வியூ செல்லும்போது பளீர் மேக்அப்பைத் தவிருங்கள். மினிமல் மேக் அப் போதுமானது. அதேபோல் சிவப்பு. பிங்க் போன்ற பளீர் நிற லிப்ஸ்டிக்குகளைத் தவிருங்கள். ஐ மேக்அப்பும் எளிமையாக இருப்பது நல்லது. ஹேர் ஸ்டைலும் வித விதமான பின்னல்கள், கிளிப்புகள் என அதிக ஸ்டைல்கள் செய்யாமல் சிம்பிலாக ஆடை மற்றும் தோற்றத்திற்கு ஏற்ப ஹேர் ஸ்டைல் செய்யுங்கள்.