Ticker

6/recent/ticker-posts

ஆப்பிளை வீழ்த்திய சாம்சங்?????



2010ம் ஆண்டு...ஐபோனுக்கு போட்டியாக ஒரு போனை களமிறக்கியே ஆகவேண்டும் என சாம்சங் முடிவெடுத்தது. ஆனால் அவர்களிடம் புதுபோனை உருவாக்க டெக்னாலஜி இல்லை. செல்போன் ஸ்கீரினை கிள்ளி சைஸை பெரிதாக்குவது உள்ளிட்ட பல டெக்னாலஜிகளை ஆப்பிள் பேடண்ட் செய்து வைத்திருந்தது.
புதிய வழிமுறைகளை உருவாக்கினால் வாடிக்கையாளர்கள் குழம்பிவிடுவார்கள் எனவும் சாம்சங் நினைத்தது. என்ன செய்வது என கையை பிசைந்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது.
"அச்சு அசலாக அப்படியே ஐபோனை காப்பி அடிச்சு பொருளை உடனடியாக ரிலீஸ் செய்வது. ஆப்பிள் கம்பனி குய்யோ, முயோன்னு கத்தி கேஸ் போடும். கேஸ் முடிய 10 வருசம் ஆகும். அதுக்குள்ள நாம லீடிங் பொசிசனுக்கு வந்துடலாம். நஷ்ட ஈட்டை கொடுத்துடலாம்"
மார்ச் 2011ல் ஆண்டு சாம்சங் காலக்ஸி வெளியே வரும் என அறிவிக்கிறது. ஜூன் 2011ம் ஆண்டு போன் வெளிவருகிறது.."அது எப்படி 2 மாதத்தில் போனை ரிலீஸ் செய்வார்கள்" என குழமிய ஆப்பிள் அதிர்ச்சி அடைந்தது. காரணம் சாம்சங் காலக்ஸி ஆப்பிளின் பலநூறு பேடண்டுகளை காப்பி அடித்திருந்தது.
உடனடியாக வழக்கு போட்டது ஆப்பிள். கேஸை இழுத்தடித்தது சாம்சங். ஏழுவருடம் கழித்து "சாம்சங் காப்பி அடித்தது உண்மை. ஆப்பிளுக்கு அவர்கள் $500 மில்லியன் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்" என தீர்ப்பு வர 1 பில்லியன் டாலர் நஷ்டைஇடு வரும் என எதிர்பார்த்து பணத்தை தயாராக வைத்திருந்த சாம்சங் இன்ப அதிர்ச்சி அடைந்தது. தீர்ப்பை தீபாவளி போல கொண்டாடியது.

நஷ்ட ஈட்டுதொகையை ஒரு சென்டு நாணயமாக மாற்றி லாரிகளில் ஏற்றிக்கொண்டுபோய் ஆப்பிளிடம் கொடுத்து ஸ்ன்டன்ட் அடிக்கலாம் என திட்டமிட்டதாக எல்லாம் ஒரு வதந்தி உலா வந்தது. ஆனால் எப்படியோ இப்படி ஒரு திருட்டுதனம் மூலம் செல்போன் சந்தையின் இரண்டாமிடத்துக்கு உடனடியாக வந்தது சாம்சங்