Ticker

6/recent/ticker-posts

கணவரின் சிகரெட் பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கும் மனைவிகளே இந்த கட்டுரையைப் படியுங்கள்...!


கணவரின் உடல் நிலைக் கருதி சிகரெட் பழக்கத்தை கைவிட மனைவி எத்தனை முறை சொன்னாலும் சரி என்று சொல்லிவிட்டு அவர்களுக்கே தெரியாமல் ரகசியமாக பிடிக்கத் தொடங்கிவிடுவார்கள். எனவே அவர்களிடம் கண்டிப்புடன் சொல்வதைக் காட்டிலும் இந்த விதிமுறைகளை கடைபிடிக்கச் சொல்லுங்கள் தானாக அதன் மீது வெறுப்பு உண்டாகும்.

வீட்டில் புகைக்க அனுமதிக்காதீர்கள் : கணவரிடம் வீட்டில் சிகிரெட் புகைப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. தினமும் சுத்தம் செய்ய வேண்டியதாக உள்ளது எனவே இனி வீட்டிற்குள் சிகிரெட் பிடிக்காதீர்கள் என்று சொல்லுங்கள். இதனால் வீட்டில் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தீய பழக்கத்தை கற்பிக்காதீர்கள் என்று சொல்லுங்கள். நிச்சயம் அவர் புகைக்க மாட்டார்.

முத்தம் கொடுக்க அனுமதிக்காதீர்கள் : சிகரெட் துர்நாற்றம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறி இனி முத்தம் கொடுக்க வந்தால் சிகரெட் பிடிக்காதீர்கள் என்று சொல்லுங்கள். சிகரெட் பிடித்த வாயோடு முத்தம் தருவதை நிறுத்துங்கள் என்று அவரை ஒதுக்கினாலே சற்று சிந்திக்க முற்படுவார்.

எதிர்காலத்தை சித்தரியுங்கள் : சிகரெட் பழக்கம் அவரை எந்த விளிம்பிற்குத் தள்ளும். இதனால் வயதான காலத்தை அனுபவிக்காமல் இளமையிலேயே இறந்து விடுவீர்கள் என்று கூறுங்கள். அதனால் வரும் உடல் உறுப்பு அழிவுகள், நோய்களை அவ்வபோது முடிந்த வகைகளில் உணர்த்த முற்படுங்கள். செய்திகள், துனுக்களைக் கண்டாலும் பகிருங்கள். இதனால் அவருக்கு எதிர்கால பயம் வரும். சிகரெட்டை தொடும்ப்பொதெல்லாம் நீங்கள் கூறிய வார்த்தைகளே நினைவிற்கு வரும்.

வணிக ரீதியில் அனுகுங்கள் : ஒரு நாளைக்கு எவ்வளவு சிகரெட் பிடிக்கிறார். அதனால் மாதம் , வருடத்திற்கு எவ்வளவு பணம் வீணாகிறது. அந்த பணத்தில் என்ன மாதிரியான ஆக்கபூர்வ விஷயங்களை செய்திருக்கலாம் என்று எடுத்துரையுங்கள்.


வாழ்க்கை முறையை மாற்றுங்கள் : கணவர் எதனால் அதிகமாக சிகரெட் பிடிக்கிறார் என்பதைக் கண்டறிந்து அந்த விஷயத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். அவருக்கு புதிய மாற்றங்களை அமைத்து தாருங்கள். அதை மறக்கும் விதமாக அவருக்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களை செய்ய ஊக்குவியுங்கள். இதனால் அவர் சிகரெட்டை நிச்சயம் கைவிட முயற்சிப்பார். இருவரும் சேர்ந்து விளையாடுவது, வெளியே செல்வது என நேரம் கழியுங்கள். வகைவகையான புதுபுது உணவுகளை சமைத்து கொடுங்கள். ஒவ்வொரு நாளும் புதிதுபோல் உணர வையுங்கள்.

அன்பை உணர்த்துங்கள் : நீங்கள் அவர் மீது எந்த அளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை உணர்த்துங்கள். அவர் சிகரெட்டைக் கைவிடுவதற்கு எந்த அளவிற்கு நீங்கள் முயற்சி செய்கிறீர்கள், விரும்புகிறீர்கள் என்பதை உணர்த்துங்கள். இந்த அழுத்தமே அவர்களுக்கு சிகரெட்டை கைவிட தூண்டுதலாக இருக்கும்.