• Breaking News

    ஜப்பான் படம் பார்க்க ஆசையா - ஜப்பானிஸ் பிலிம் பெஸ்டிவலுக்கு வாங்க



    சென்னை: ஜப்பான் திரைப்பட திருவிழா வரும் நவம்பர் 8ஆம் தேதி முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை சென்னையில் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த கொண்டாட்டத்தில் ஜப்பானிய திரைப்படங்கள், பிரபலமான மால்களான PVR, ICON, VR MALL உள்ளிட்ட இடங்களில் திரையிடப்படவிருக்கிறது. 

    இந்த ஜப்பான் திரைப்பட திருவிழா, இந்திய இணை துணை இயக்குநர்களுக்கு இந்த விழா ஒரு கொண்டாட்டமாக அமையப்போகிறது. இதற்கான நுழைவு கட்டணம் இலவசம். திரைப்படத்திற்கான பாஸ்கள் அந்தந்த குறிப்பிட்ட மால்களில் படம் திரையிடப்படும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வழங்கப்படும். 

    முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து ஜப்பானிய திரைப்படங்களும் ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்படும். ஜப்பான் இயக்குநர்களில் மிகவும் பிரபலமானவர் மற்றும் உலக புகழ்பெற்றவர் அகிரா குரோசாவா. இவர் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட திறமையாளராக விளங்கியவர்.