• Breaking News

    புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ரஷ்யா!


    கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய புதிய ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
    ரஷ்யாவினால் உருவாக்கப்பட்ட க்நாஸ் விளாடிமிர் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், கடற்படையின் வடக்கு படைப்பிரிவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இணைத்து கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்நிலையில், வெள்ளை கடல் பகுதியில் குறித்த நீர்மூழ்கியில் இருந்து புலுவா எனப்படும் புதிய ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
    அதுதொடர்பான காணொளியினை காட்சியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.