• Breaking News

    விருந்திற்கு வீட்டிற்கு அழைக்கப்பட்ட கணவனின் நண்பர்கள்: கணவனைக் கொன்று, மனைவியையே விருந்தாக்கிய சோகம்


    தீபாவளி தினத்தன்று சக நண்பர்களுக்கு விருந்தளித்த  நண்பனை கொன்று  மனைவியை பாலியல் வல்லுறவுக்குட் படுத்திய சம்பவம்  ஒன்று இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 
    மத்திய பிரதேசம் மாநிலம் விதிஷா மாவட்டம் ஆலம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (பெயர் மாற்றம்) தீபாவளியையொட்டி தனது நண்பர்கள் அனில் குஷ்வஹா, மனோஜ் அஹிர்வார் ஆகியோரை தனது வீட்டுக்கு மது விருந்துக்கு அழைத்தார்.
    இந்நிலையில், சுனில்குஷ்வஹா, மனோஜ் அஹிர்வார்  ஆகிய நண்பர்கள் விருந்திற்கு  சென்று அதிக மது அருந்தி மதுபோதையில் ராஜேஷின் மனைவியிடம் சில்மி‌ஷம் செய்தனர்.
    பின்னர் அவரை வீட்டுக்கு பின்புறம் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்த  முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் தனது மனைவியை காபாற்ற போராடியுள்ளார். 
    இதனால் அவரை சுனில்குஷ்வஹா, மனோஜ் சரமாரியாக தாக்கினர். இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  பின்னர் அவரது மனைவியை இருவரும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தப்பி சென்றனர்.
    இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜேஷ் உடலையும், பாதிக்கப்பட்ட மனைவியையும் மீட்டு பொலிஸ் வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். 
    லதேரி பகுதியிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்ற போது அங்கு வைத்தியர்கள் இல்லை. இதையடுத்து அங்கிருந்து 34 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வைத்தியசாலைக்கு  கொண்டு சென்றனர். 

    ஆனால் அங்கும் வைத்தியர்கள் இல்லை. பின்னர் அங்கிருந்து 28 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் சிரோன்ஜியில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்தியருக்காக 2 மணி நேரம் காத்திருந்தனர். அப்போது லதேரி  வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் பொலிஸாருக்கு தெரியவந்தது.
    இந்நிலையில்,  மீண்டும் லதேரி வைத்தியசாலைக்கு  ராஜேஷ் உடலையும், அவரது மனைவியையும் கொண்டு சென்றனர். அங்கு ராஜேஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
    பின்னர் ராஜேசின் மனைவியை சிகிச்கைக்காக லதேரியில் இருந்து 80 கிலோ மீற்றர் தூரத்தில் பசோடா பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். 
    கணவர் உடலுடன் சுமார் 170 கிலோ மீற்றர் தூரம் பாதிக்கப்பட்ட பெண் அலைந்த சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. வைத்தியசாலைகளில் முறையாக வைத்தியர்கள்  இல்லாததால் அப்பெண்ணுக்கு தாமதமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
    குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.