• Breaking News

    மாதவிடாய் வலியைத் தவிர்க்க இரவில் இந்த நிலையில் தூங்குங்கள்..!

     

    இப்படி படுக்கும்போது அடி வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளுக்கு அழுத்தம் தரப்படுகிறது. தசைகள் இலகுவாகி வலியைக் குறைகிறது. வயிறு இறுக்கிப் பிடித்தலும் குணமாகிறது. 

    மாதவிடாய் நாட்களில் இரவு தூங்கும்போது எப்போதும் ஒரு பயம் இருக்கும். விளம்பரங்களிலும் மாதவிடாய் நாட்களில் இரவில் ஏற்படும் பிரச்னைகளை முன் வைத்தே தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வார்கள். இருப்பினும் இதை தவிர்க்க எந்த தீர்வும் இல்லாத நிலையில் இந்த உறங்கும் நிலை உங்களுக்கு உதவும் என்கிறார் கிளாமர் இதழின் ஹெல்த் மருத்துவர் லிசா லிண்ட்லி.

    மாதவிடாய் நாட்களில் ஒரு பக்கமாக திரும்பி அதாவது குழந்தை கருவில் இருக்கும் நிலையைப் போல் தூங்கினால் மாதவிடாய் வலி, வயிறு இறுக்கிப் பிடித்தல் இருக்காது என்கிறார் மருத்துவர்.

    இப்படி படுக்கும்போது அடி வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளுக்கு அழுத்தம் தரப்படுகிறது. இதனால் தசைகள் இலகுவாகி வலியைக் குறைக்கிறது. வயிறு இறுக்கிப் பிடித்தலும் குணமாவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    அதுமட்டுமன்றி இப்படி படுக்கும்போது கால்களுக்கும் ஒன்றோடு ஒன்று மூடி அழுத்தம் தரப்படுகிறது. இந்நிலையில் உதிரப் போக்கு அதிகமாக வெளியேறுவதும் குறையும். இதனால் பெட்ஷீட், போர்வையில் கறை பட்டுவிடுமோ என்ற பயமும் தேவையில்லை.

    முக்கியமாக இந்த நாட்களில் மட்டும் முன்பக்கும் கவிழ்ந்து படுப்பதைத் தவிறுங்கள். அப்போது வயிற்றுக்கு அழுத்தம் தரப்பட்டு கர்ப்பப்பையிலும் அழுத்தம் ஏற்படும். இதனால் உதிரப்போக்கு அதிகமாகும்.

    அதேபோல் வெப்பம் நீரால் ஒத்தடம் (heat pad) தந்துவிட்டு தூங்கினால் தசைகள் இலகுவாகும். இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கலாம்.