• Breaking News

    மாதவிடாயைக் கணக்கிடும் ஆப்கள் பெண்களின் அந்தரங்க விஷயங்களை ஃபேஸ்புக்கிற்கு பகிர்வதாக அதிர்ச்சி தகவல்


    பெண்கள் பயன்படுத்தும் மாதவிடாய் நாட்களை கணக்கிடும் ஆப்புகள் அவர்களுடைய தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களை ஃபேஸ்புக்கிற்குப் பகிர்வதாக சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வை இங்கிலாந்தைச் சேர்ந்த லாப நோக்கற்ற பிரைவசி இண்டர்நேஷ்னல் குழுவின் கண்கானிப்பாளர் குழுவால் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Period tracking apps என்று சொல்லக் கூடிய பெண்களின் மாதவிடாயைக் கண்காணித்துக் கூறும் ஆப்கள் அவர்கள் கடைசியாக உடலுறவு மேற்கொண்டது, குழந்தைக் கட்டிப்பாட்டிற்கு எந்த மாதிரியான விஷயங்களை மேற்கொள்கிறார்கள், மாதவிடாய் நாட்கள், கர்ப்பகாலம் போன்ற அந்தரங்க விஷயங்களை ஃபேஸ்புக் போன்ற பல இணையதளங்களுக்குப் பகிர்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அந்த ஆப் நிறுவனங்களுக்கு மெயில் அனுப்பிய போது ஒரே ஒரு ஆப்தான் திருத்திக் கொள்வதாக பதில் அனுப்பியுள்ளது. இதில் உலக அளவில் பிரபலமான Maya and MIA Fem ஆகிய இரு ஆப்கள் நீங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு தகவல்கள் கொடுத்த அடுத்த நொடியே ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு விற்றுவிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அந்த ஆப்களின் நீங்கள் அளிக்கும் தகவல்களான உங்களின் கடைசி மாதவிடாய் நாள், மாதவிடாய் நாட்களின் ஏற்படும் வயிற்று வலி , மற்ற உபாதைகள், இரத்த அழுத்தம், முகப்பருக்கள், உடலுறவு மேற்கொண்ட விஷயங்கள், அப்போது ஏற்படும் சிக்கல்கள் , அடுத்த மாதம் சரியாக குறிப்பிடும் தேதியில் மாதவிடாய் வருகிறதா..வரவில்லை என நீங்கள் தரும் கருத்திற்கு ஆப் கேட்கும் கேள்விக்கு நீங்கள் தரும் பதில் என அனைத்தையும் அது உங்களிடமிருந்து சேகரித்து விற்கிறது என அந்த அறிக்கையில் கூறப்படுள்ளது. எனவே இதுபோன்ற ஆப்புகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருப்பது அவசியம் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.