Ticker

6/recent/ticker-posts

சர்ச்சைக்குரிய கன்னியா வெந்நீரூற்று விவகார வழக்கு! மீண்டும் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில்

சர்ச்சைக்குரிய கன்னியா வெந்நீரூற்று விவகார வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் ஆட்சேபணை மனுவை தாக்கல் செய்வதற்காக நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது, ஆட்சேபணை மனு தாக்கல் செய்ய பிறிதொரு தினம் தருமாறு அரச சட்டவாதி நீதிமன்றத்தினைக் கோரினார்.
அதேநேரம், தன்னையும் கட்சிக்காரராக அனுமதிக்குமாறு கன்னியா (நிலாவெளி) வில்கம் விகாரையின் பௌத்த மதகுரு மனுத் தாக்கல் செய்தார்.
கட்சிக்காரராக பௌத்த மதகுருவை சேர்த்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் அனைத்துத் தரப்பு விசாரணையின் பின்னர் முடிவு எடுக்கப்படும் என நீதிபதி இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்தார்.
விகாரை கட்டக்கூடாது, தாது கோபுரம் கட்டக்கூடாது, பிள்ளையார் கோயில் கட்டக்கூடாது என்ற மூன்று இடைக்காலத் தடை உத்தரவுகளும் வழக்கு முடிவடையும் வரை அமுலில் இருக்கும் என ஏற்கனேவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும் நீதிமன்றம் இதன்போது உத்தரவு பிறப்பித்ததுடன், மேலும் ஆட்சேபனை மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதிக்கு இடையில் தாக்கல் செய்யுமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.