Ticker

6/recent/ticker-posts

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை



நாட்டில் பிற்பகல் வேளையில் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் சில இடங்களில் காலையில் பனிமூட்டமான காலநிலை காணப்படும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமான கடும்காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.