Ticker

6/recent/ticker-posts

ஈசியா உடல் எடையை குறைக்க.. டிரெண்டாகும் ஜப்பானியர்களின் வாழைப்பழ டயட்...!

 

ஜப்பானியர்களுக்கு முன்பே தமிழர்கள் தெரிந்துகொண்டதால்தான் விருந்து உபசரிப்புகளில் கட்டாயம் வாழைப்பழம் இடம்பெறும். 

வாழைப்பழம் நார்ச்சத்தை உள்ளடக்கியது என்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது அனைவரும் அறிந்ததே..! இதை ஜப்பானியர்களுக்கு முன்பே தமிழர்கள் தெரிந்துகொண்டதால்தான் விருந்து உபசரிப்புகளில் கட்டாயம் வாழைப்பழம் இடம்பெற்றிருக்கிறது.
இப்படி வாழைப்பழத்தின் மருத்துவ குணம் அறிந்திருந்தாலும் இன்றைய தலைமுறை அதை பின்பற்றுகிறதா என்றால் சந்தேகமே.! ஆனால் ஜப்பானியர்கள் வாழைப்பழத்தையே மூலமாக வைத்து உடல் எடையைக் குறைக்கின்றனர். அது தற்போது இந்தியாவிலும் டிரெண்டாகி வருகிறது.
வாழைப்பழத்தில் நார்ச்சத்து மட்டுமன்றி ஸ்டார்ச் , பல வகையான ஊட்டச்சத்துக்கள் அதோடு விரைவில் ஜீரணிக்கக் கூடிய உணவு என்பதும் இந்த டயட்டின் கூடுதல் பலன்களாகும்.


இந்த டயட்டை எப்படி கடைபிடிக்க வேண்டும்..?

காலை உணவிற்கும் வாழைப்பழம் : காலையில் உணவுக்கு பதிலாக வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். முடிந்த அளவு சாப்பிடுங்கள். மேலும் மேலும் உண்டு திணிப்பதை தவிர்க்கவும். நன்கு பழுத்த வாழைப்பழங்களை சாப்பிடுங்கள்.

சம அளவிலான ஊட்டச்சத்து உணவு : மதிய உணவிற்கு இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்றுக் கட்டுப்பாடுகள் கிடையாது வயிறு நிறைய சாப்பிடலாம். ஆனால் அந்த உணவு சம அளவிலான ஊட்டச்சத்துமிக்க உணவு , தானிய வகைகள், காய்கறிகள் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிருங்கள்.

தாகத்திற்கு தண்ணீர் மட்டும் : இந்த டயட்டில் குளிர்பானங்கள், கியாஸ், சோடா குளிர்பானங்களை தவிருங்கள். அதேபோல் குளிர்ந்த மற்றும் சூடான தண்ணீரையும் அருந்தக் கூடாது. தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும்.

மாலை ஸ்நாக்ஸ் : மாலை நேரத்தில் எண்ணெய் தின்பண்டங்களை தவிருங்கள். கை நிறைய நட்ஸ் வகைகளை சாப்பிடுங்கள். அதிகக் கொழுப்பு நிறைந்த உணவை தவிருங்கள். எப்போதாவது பசித்தால் ,சாப்பிடத் தூண்டினால் பழங்கள் சாப்பிடலாம். ஆனால் அதுவே பழக்கமாகப் பின்தொடரக் கூடாது.

இந்த வாழைப்பழ டயட்டில் குறிப்பிட அளவு இல்லை என்பதால் கலோரிகளில் கவனம் செலுத்துவது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். எனவே நீங்களே தினமும் குறிப்பிட்ட அளவு கலோரியை வகுத்துக்கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப உணவுகளை சாப்பிடுங்கள். ஆனால் கட்டாயமாக வாழைப்பழம் காலையில் உணவாக எடுத்துக்கொள்வதை தவறாதீர்கள்.

இவை தவிர தினமும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்வது , தினமும் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுவது விரைவில் உடல் எடை குறைப்பதை அதிகரிக்கும்.