• Breaking News

    எதிர்பார்ப்பை தூண்டும் ‘சைக்கோ’ டீசர்...! - வீடியோ

    மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தயாராகியுள்ள சைக்கோ படத்தின் டீசர் வெளியாகி வரவேற்ப்பை பெற்றுள்ளது.

    தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் ஸ்டாலினின் மகனான இவர், கதிர்வேலனின் காதல், நண்பேண்டா, சரவணன் இருக்க பயமேன், நிமிர் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
     
    உதயநிதி நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற பெயரில் கிரைம் திரில்லர் படம் தயாரானது. இளையராஜா இசையில், பி.சி ஸ்ரீராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் நடித்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. க்ரைம் திரில்லராக டீசர் இருப்பதால், படத்திற்கான எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.