• Breaking News

    தொலைக்காட்சி நேரலையில் மூழ்கிய பெற்றோர் - சுர்ஜித்தை அடுத்து மற்றுமொரு சிறுமி மரணம்


    தமிழகம், திருச்சி - மணப்பாறையில் சிறுவன் சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தமை இன்று உலகத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.
    சிறுவன் சுர்ஜித் இறப்பின் துயரம் நம்மை விட்டுச் செல்வதற்கு முன்னரே தூத்துக்குடியில் மற்றுமொரு சிறுமி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
    தூத்துக்குடி மாவட்டம் தெரசபுரத்தில் வசிக்கும் மீனவர் லிங்கேஸ்வரன் மற்றும் நிஷா ஆகியோரின் இரண்டு வயது மகள் ரேவதி சஞ்சனா என்ற சிறுமி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
    பெற்றோர் தொலைக்காட்சியில் பரபரப்பாக சுர்ஜித் மீட்பு நடவடிக்கைகளை பார்த்து வந்த போது, இரண்டு வயதான ரேவதி தனது வீட்டில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
    சில நேரம் கழித்து குழந்தை காணவில்லை என அனைவரும் தேடவே, குழந்தையின் தந்தை குளியலறையில் சென்று பார்க்க, குழந்தையின் ஒரு கால் மட்டும் வெளியே தெரிந்துள்ளது.
    ரேவதியை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரியவருகின்றது.