• Breaking News

    நயன்தாராவை புகழ்ந்து பாராட்டிய பாலிவுட் நடிகை!



    நயன்தாராவை தாராள மனதுடையவர், கனிவானவர் என்று பிரபல பாலிவுட் நடிகை புகழாரம் சூட்டியுள்ளார்.
    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் இருப்பவர் கத்ரீனா கைஃப். தற்போது தனது பிராண்ட் மேக்கப் உபகரணங்களை அறிமுகம் செய்துள்ள கத்ரீனா அதற்கு கே பியூட்டி என்று பெயர் சூட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்தியாளர் குறிப்பில், என் பயணத்தில் ஒப்பனை ஒரு முக்கிய பங்காக இருக்கிறது. நம்மை எது மகிழ்ச்சியாக்குகிறதோ அதில் தான் அழகு இருக்கிறது என்பதை நம்புகிறேன். ஒப்பனை மீது எனக்கிருக்கும் அன்பை கே பியூட்டி எனது முதல் அழகு சாதன பிராண்ட் மூலம் காட்டியிருக்கிறேன்.


    கே பியூட்டி விளம்பரத்தில் நடிகை கத்ரீனா கைஃப் உடன் பல்வேறு முன்னணி நடிகைகளும் இணைந்து நடித்துள்ளனர். அவர்களில் நயன்தாராவும் இடம்பெற்றுள்ளார்.