• Breaking News

    மன அழுத்தம் காரணமாக விலகினார் மெக்ஸ்வெல்


    அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்ட நாயகனம் கிளென் மெக்ஸ்வெல் இலங்கை அணியுடனான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியில் விளைாயட மாட்டார் எனவும், குறுகிய காலத்துக்கு தற்காலிகமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளதாகவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் மேலும் தெரிவிக்கையில்,
    மெக்ஸ்வெல் அணியின் பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி, உளவியல் பயிற்சியாளர்களிடம் தனக்கு குறுகிய காலத்துக்கு ஓய்வு தேவை. தான் மன அழுத்தம், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு இருப்பதால், குறுகிய காலத்துக்கு கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். 
    இதையடுத்து அவரிடம் பேசிய அணியின் உளவியல் நிபுனர் டாக்டர் மைக்கேல் லாய்ட் மெக்ஸ்வெலுக்கு ஓய்வு தேவை என்பதை உறுதி செய்து பரிந்துரைத்தார்.
    இதனால், இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடரில் இருந்து மெக்ஸ்வெல் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்குப் பதிலாக டிஆர்க் ஷார்ட் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.