வேலை , பள்ளிக்குச் செல்வோர் என பலரும் துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸ்
பிரச்னையை சந்தித்திருக்கக் கூடும். இனியும் இந்த பிரச்னை வராமல் தடுக்க
இந்த வீட்டுக் குறிப்புகளைச் செய்து பாருங்கள்.
படிக்கல் பயன்படுத்துதல் : பாதங்களில் இறந்த செல்களை நீக்க ஸ்க்ரப்பிங்
அல்லது இதற்கென விற்கப்படும் படிக்கல்களைப் பயன்படுத்தி தேய்த்தால் கால்கள்
சுத்தமாகும். இதனால் பாக்டீரியாக்கள் தேக்கமும் அழியும்.
உப்பு : பாத்திரத்தில் வெது வெதுப்பான நீர் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் உப்பு
கலந்து கால்களை அரை மணி நேரம் ஊற வைத்து பின் பாதங்களை ஸ்க்ரப் செய்தால்
கால்கள் துர்நாற்றம் குறையும்.
வினிகர் : வினிகரை வெதுவெதுப்பான நீரில் ஊற்றி கால்களை 15 - 20 நிமிடங்கள்
ஊற வையுங்கள். உங்கள் கால் அல்லது பாதங்களில் புண், வடு, கீரல் என
இருப்பின் இந்த குறிப்பை செய்ய வேண்டாம்.
ஸ்ப்ரே : கால்களின் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்கென நிறைய வாசனை நிறைந்த
ஸ்ப்ரேக்கள் விற்னைக்கு கிடைக்கின்றன. அதை சாக்ஸ் போடும் முன்
அடித்துகொண்டால் துர்நாற்றம் நீங்கும்.