Ticker

6/recent/ticker-posts

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய அதிரடி தீர்ப்பு



திருகோணமலையில் மனவளர்ச்சிக் குன்றிய சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் இன்றையதினம் தீர்ப்பளித்துள்ளார்.
திருகோணமலை, நிலாவெளி இலும்பைக் குளம் பகுதியில் இருந்து சிறுவர் இல்லத்தில் வளர்த்து வந்த 16 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட மன வளர்ச்சிக் குறைந்த சிறுமியை, அரவது தந்தை மற்றும் இரு சிறுவர் இல்ல காப்பாளர்கள் இணைந்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
நீதவான் நீதிமன்றில இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்த போது சிறுமியின் தந்தை இறந்து விட்டார். சிறுவர் இல்ல காப்பாளர்கள் இருவருக்கும் எதிராக தனி தனியாக வழக்குகள் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை முடிவடைந்து சிறுவர் இல்ல காப்பாளர்கள் இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்து இருவருக்கும் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை, 5 இலட்சம் நஷ்ட ஈடு, 5000 ரூபா தண்டப்பணம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
குறித்த சிறுமியை இலுப்பைக்குள சிறுவர் இல்ல வீடமைப்பு திட்டத்தில் வைத்து சிறுமிக்கு மாத்திரை மற்றும் ஊசி ஏற்றி பல தடவை பாலியல் வல்லுறவு நடத்தப்பட்டதாக சிறுமி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருந்தார்.
சிறுவர் இல்லம் களியாட்ட இடமாக மாற அனுமதிக்க முடியாது, சிறுமியை பாதுகாக்க வேண்டிய சிறுவர் இல்ல பாதுகாவலர்கள் இத்தகைய குற்றச் செயலை செய்ததை மன்னிக்க முடியாது.
இன்று வழங்கும் இந்த தீர்ப்பு அனைத்து சிறுவர் இல்ல பாதுகாவலர்களுக்கும் எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன் எதிரிகளில் ஒருவர் 70 வயதும் மற்றொருவர் 63 வயதும் எனக்கூறி கருணை காட்டுமாறு கூறிய விண்ணப்பத்தையும் நிராகரித்து கடுமையான எச்சரிக்கையுடன் 10 வருட கடூழிய சிறைத் தண்டனை தீர்ப்பளித்தார்.
குறித்த சிறுமி சிறுவர் இல்லத்திற்கு செல்வதற்கு முன்னர் வீட்டில் இருந்தபோது அவரது தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்ட போது அதனை அவருடைய தாயார் கண்ணால் கண்டவுடன் அவரது தாயார் தனக்குத் தானே மண்ணென்ணெய் ஊற்றி தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத அடுத்தே இச் சிறுமி சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிறுவர் இல்ல வீடமைப்புத் திட்டத்தில் வீடு கொடுக்கப்பட்டது. இங்கு வைத்து மீண்டும் தந்தை மற்றும் காவளாளர்கள் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.