• Breaking News

    பிறந்தநாளன்று மாயமான சுவிஸ் மாணவி: பெற்றோருக்கு கிடைத்த பகீர் தகவல்

     
    சுவிட்சர்லாந்தில் இளம்பெண் ஒருவர் தமது பிறந்தநாளன்று மாயமான விவகாரத்தில், நீண்ட ஓராண்டுக்கு பின்னர் சிதைக்கப்பட்ட நிலையில் அவர்து உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.
    சுவிஸ் எல்லையில் அமைந்துள்ள பிரஞ்சு நகரம் ஒன்றில் நண்பர் ஒருவரை சந்திப்பதாக கூறி 20 வயது மாணவி Sophie Le Tan கடந்த 2018 செப்டம்பர் 7 ஆம் திகதி சென்றுள்ளார்.
    அன்றைய நாள் அவருக்கு பிறந்தநாள் என்பதால் அவரது குடும்பத்தினர் உணவு விடுதி ஒன்றில், பிறந்தநாளை கொண்டாட அவருக்காக காத்திருந்துள்ளனர்.
    ஆனால் வெகுநேரம் காத்திருந்தும் Sophie Le Tan அந்த உணவு விடுதிக்கு திரும்பவில்லை என்பது மட்டுமல்ல அவர் குடியிருப்புக்கும் திரும்பவில்லை என்பது குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    இதனையடுத்து பொலிசாருக்கு அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு பின்னர் Jean-Marc R என்ற 59 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
    ஏற்கனவே குறித்த நபர் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் தண்டனை பெற்றுள்ளார் என்பதால் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தினர்.
    மட்டுமின்றி, அவரது குடியிருப்பில் ரத்தக்கறை இருந்ததையும் பொலிசார் உறுதி செய்துள்ளனர். ஆனால் காயத்துடன் இளம்பெண் ஒருவர் உதவி கேட்டு வந்ததாகவும், அவருக்கு உதவி செய்து அனுப்பியதாகவும் அக்டோபர் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் அவர் சாட்சியம் அளித்துள்ளார்.
    இந்த நிலையில் சம்பவம் நடந்து சுமார் ஓராண்டு கடந்திருக்கும் நிலையில், பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள Alsace வனப்பகுதியில் கடந்த 23 ஆம் திகதி சிதைக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை விசாரணை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

    வெள்ளியன்று மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு ஆய்விலும், டி.என்.ஏ சோதனையிலும் அது மாயமான மாணவி Sophie Le Tan என்பது உறுதியாகியுள்ளது.
    இந்த தகவலை தற்போது மாயமான தங்களது மகளுக்காக கடந்த ஓராண்டாக காத்திருக்கும் அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.