Ticker

6/recent/ticker-posts

இந்த நான்கு வகையான கனவுகளை கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா ?

 

உங்கள் காதல் துணையை ஏமாற்றுவது அல்லது அவர் உங்களை ஏமாற்றுவது போன்று கனவு வந்தால் இன்னும் உங்கள் காதலில் புரிதல் வேண்டும் என்று அர்த்தம்.

செக்ஸ் கனவு பலருக்கும் வந்திருக்கலாம். ஒருவேளை அதை நீங்கள் வெளியே சொல்லாமலும் இருந்திருக்கலாம். ஆழ்ந்த தூக்கத்தில் சட்டென எழுந்த நீங்கள் இந்தக் கனவை நண்பர்களுக்குச் சொல்லலாமா..எதனால் இப்படி ஒரு கனவு வந்தது என உங்களுக்குள்ளேயே குழப்பிக் கொண்டிருந்தால் உங்களுக்கான தீர்வுதான் இந்தக் கட்டுரை.
பழைய காதலன் காதலியுடன் செக்ஸ் கனவு வந்தால் அவருடன் மீண்டும் இணைய வேண்டும் என்ற ஆசை இருக்கலாம் என்பது மட்டுமல்ல. அந்த பிரிவிலிருந்து இன்னும் நீங்கள் வெளியே வரவில்லை..இன்னும் நாட்கள் தேவைப்படுகிறது என்ற அர்த்தமாகவும் இருக்கலாம். நீங்கள் வெற்றிட வாழ்கையில் பயணிக்கிறீர்கள் எனில் இந்த கனவுகள் இன்னும் அடையக்கூடிய இலக்கை உங்களுக்கு நினைவூட்டுவதற்கான நோக்கமாக இருக்கலாம்.

பாஸுடன் செக்ஸ் வைத்துக் கொண்டது போல் கனவு வந்திருந்தால் நிச்சயம் தடாலடியாக எழுந்து ஏன் இவ்வாறு கனவு வந்தது என சங்கடமாக உணர்ந்திருக்கலாம். இது உங்களுக்கும் , பாஸுக்குமான உறவைச் சொல்வதாக இருக்கலாம் அல்லது அவர் மீது உங்களுக்கு க்ரஷ் இருக்கலாம். அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைக் கொண்டிருக்கலாம். ஒருவேளை அவருடைய குறிப்பிட்ட சில விஷயத்தால் நீங்கள் அதிகம் ஈர்க்கப்பட்டிருக்கலாம்.

உங்கள் காதல் துணையை ஏமாற்றுவது அல்லது அவர் உங்களை ஏமாற்றுவது போன்று கனவு வந்தால் இன்னும் உங்கள் காதலில் புரிதல் வேண்டும் என்று அர்த்தம்.ஒருவேளை முந்தைய காதலில் நீங்கள் ஏமாற்றியிருந்தால், ஏமாற்றப்பட்டிருந்தால் அதன் தாக்கமாகவும் இருக்கலாம் அல்லது உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லாமல் இருக்கலாம். அந்த காதலில் விருப்பம் இல்லாமல் இருப்பதால் முழு அன்பைக் காட்ட முடியாத குற்ற உணர்வாகவும் இருக்கலாம்.


பொதுவெளியில் செக்ஸ் செய்வதுபோல் கனவு வந்தால் சாகச விரும்பிகளுக்குதான் இப்படி வரும். உங்கள் துணையிடம் ஏதோ எதிர்ப்பார்க்கிறீர்கள். எதிர்பார்த்த திருப்தி கிடைக்கவில்லை என்ற காரணம் இருக்கலாம் அல்லது துணையுடன் இருந்த உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்து அதை எப்படி கொண்டு செல்வது என்ற பயமும் இருக்கலாம். அதனால் என்ன ஆகுமோ , மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டால் என்ன ஆகுமோ என்ற பயம் கூட இப்படி கனவாக வரலாம்.