• Breaking News

    விண்ணப்பித்தும் அடையாள அட்டை கிடைக்காதோருக்கு விசேட அனுமதிப்பத்திரம் !


    விண்ணப்பித்து ஆனால் இதுவரை தேசிய அடையாள அட்டைகளைப் பெறாத சுமார் 3 இலட்சம் பேருக்கு தேர்தலில் வாக்களிக்க தற்காலிக அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    மேற்படி தற்காலிக அனுமதிப் பத்திரங்கள் அந்தந்த கிராம அலுவலர்களுடனும் ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்துடனும் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரியுடனும் இணைந்து வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
    இந்த தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு மாத்திரம் வழங்கப்படுவதுடன், வாக்கினை பதிவுசெய்த பின்னர் அதே நாளில் குறித்த தற்காலிக அனுமதிப்பத்திரங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு  சுட்டிக்காட்டியுள்ளது.
    தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் காகிதத் தாள்களின் பற்றாக்குறை காரணமாக சுமார் 3 இலட்சம் விண்ணப்பதாரர்களுக்கு அடையாள அட்டைகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
    இதேவேளை, மலேசியாவில் இருந்து குறித்த காகிதத் தாள்களை இறக்குமதிசெய்வதற்கு ஒரு மில்லியன் ரூபா செலவாகும் என்பதால் அடையாள அட்டைகளை உடனடியாக விநியோகிக்க முடியாத நிலை உள்ளதாகவும் அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.