• Breaking News

    உலகிலேயே சுற்றுலாவாசிகளால் அதிக நெரிசலை சந்திக்கும் நகரங்கள் எது தெரியுமா..?


    உலகை சுற்றிப் பார்க்கும் ஆசை இன்று பலரிடமும் விரிந்திருக்கிறது. அதன் வளர்ச்சிதான் ஒவ்வொரு நாடுகளுக்கும் கிடைக்கும் லாபகரமான வருமானம். அப்படி உலக அளவில் அதிகமான சுற்றுலாவாசிகளால் இந்த நகரங்கள் லாபத்தை குவிக்கின்றன. அதேசமயம் இந்த சிறு நகரங்கள், மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் சுற்றுலாவாசிகளால் நெரிசலை சந்தித்து வருகின்றன. 
    உலக சுற்றுலா மற்றும் சுற்றுலா கவுன்சில் ஒவ்வொரு வருடமும் ஒரு பட்டியலை தயார் செய்யும். அப்படி இந்த வருடமும் 2030-ம் ஆண்டில் இந்த நாடுகள் சுற்றுலாவால் லாபம் ஈட்டும் என்று வகுத்துள்ளது. அதில் 2030-ம் ஆண்டிற்கு 50 நாடுகளை பட்டியலிட்டு அதற்கு வருமானத்திற்கான 75 காரணங்களை குறிப்பிட்டுள்ளது.

    இதனால் அந்த நகரங்களின் வருமானம் அதிகரித்து எத்தனை தட்டுப்பாடுகளையும் சமாளிக்கும் என குறிப்பிடுகிறது. அந்த ஐம்பது நாடுகளின் நகரப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன ஆம்ஸ்டர்டாம், சான் பிரான்சிஸ்கோ மற்றும் ப்ராக்.


    ஆம்ஸ்டர்டாம்

    நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் கடந்த ஆண்டு 18 மில்லியன் சுற்றுலாவாசிகளை கண்டுள்ளதாக பிபிசி குறிப்பிட்டுள்ளது. ஆனால் அந்த நகரின் மொத்த மக்கள் தொகையே 1 மில்லியனுக்கும் குறைவானது. உடனே செல்ல மனமின்றி வாடகைக்கு வீடு பார்த்து தங்கும் நிலை அதிகரித்து டிமாண்டாகியுள்ளது. இதனாலேயே இந்த நகரம் எப்போதும் கூட்டம் நிறைந்து பரபரப்பாகவே காணப்படுகிறது.

    சான் பிரான்சிஸ்கோ

    அதேபோல் சான் பிரான்சிஸ்கோ என்று சொன்னாலே அனைவருக்கும் சட்டென உதிர்ப்பது கோல்டன் கேட் பிரிஜ்தான். இது இடம் பெறாத உலக சினிமாக்களே கிடையாது எனலாம். அதேபோல் அதிக அளவில் சுற்றுலாவாசிகளைக் கவர்ந்த இடமும் இதுதான். சிலிகான் வேலி அடுத்த இடத்தை பிடிக்கும் முக்கிய இடம். சிலிகான் வேலி சுற்றுலாவாசிகள் தங்கிச் செல்ல மிகவும் விருப்பப்படும் இடம். இங்கு சென்றால் எங்கு பாரின் மக்களின் செல்ஃபி மோகம் நிறைந்திருக்கும். இதனால் அங்கு சாலை நெரிசலே ஏற்படுமாம். இதனால் அந்த நாடு நெரிசலைத் தவிர்க்க மற்ற இடங்களையும் சுற்றுலாதலமாக மாற்றி வருகிறதாம். இங்கு வருடத்திற்கு9 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கிறதாம்.!

    ப்ராக்

    சுற்றுலாவாசிகளால் கூட்ட நெரிசலை சந்திப்பதில் ப்ராக் மிக முக்கிய நாடு. இதனால் அங்கு வசிக்கும் மக்களையே மற்ற இடங்களுக்கு அனுப்பி அவர்களை அமைதியான வாழ்வு வாழ ஏற்பாடு செய்யவுள்ளது. கடந்த ஆண்டு 7.9 மில்லியன் சம்பாதித்துள்ளது. இங்கு செக் குடியரசின் தலைநகரம் மற்றும் அதன் மாலே ஸ்ட்ரானா (Malá Strana) மற்றும் கோட்டை பகுதி மிகவும் பிரபலமானது.