• Breaking News

    சளித் தொல்லை, தொடர் இருமல் பிரச்னையா..? இஞ்சி இருக்க கவலை ஏன்...



    மழைக் காரணமாக குழந்தை முதல் பெரியவர்கள் வரை சளி, தொடர் இருமல், நெஞ்சு சளியால் அவதிப்பட்டு வருகின்றனர். இது பருவநிலை மாற்றத்தால் வரக் கூடியது என்றாலும் அதை அப்படியே விடுவது மற்ற நோய்களையும் உருவாக்கலாம். இதைத் தடுக்க ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சை அளிப்பது நல்லது. அதற்கு வீட்டிலேயே இருக்கும் அதிமருந்தான இஞ்சி சிறந்த வீட்டுக் குறிப்பு.

    பாக்டீரியா, வைரஸ் தொற்றுக் காரணமாகவும் சளி , இருமல் ஏற்படும். அதைத் எதிர்த்துப் போராடும் வலிமை இஞ்சிக்கு உண்டு. அதோடு சளி அதிகரிப்பதை தடுத்து அடியோடு அகற்றுவதிலும் இஞ்சி சிறந்த மருந்து.

    இஞ்சி சளியை நீக்குவதற்கு மட்டுமன்றி, தொடர் இருமலால் ஏற்பட்ட நெஞ்சு வலிக்கு இதமான உணர்வை அளிக்கவல்லது.

    இஞ்சியை பால் இல்லாமல் தண்ணீரில் கொதிக்க வைத்து அதோடு தேன் கலந்து வெதுவெதுப்பாக குடிப்பது நல்ல பலனைத் தரும்.

    அடுத்ததாக இஞ்சியை நன்கு அரைத்து அதோடு அரிசி மாவு , தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒரு ஸ்பூன் வீதம் கலந்து துணியில் கொட்டி அதை நெஞ்சில் ஒட்டிக் கொண்டு இரவு அப்படியே தூங்கிவிடவும் காலை எழும்போது நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகளாக இருந்தால் 2-3 மணி நேரத்திற்கு மட்டும் கட்டி அகற்றிவிட வேண்டும். இது நெஞ்சு சளி, இருமலை நீக்க மற்றொரு வழியாகும்.