• Breaking News

    கிண்ணியா செல்லும் சஜித்


    புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கிண்ணியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
    திருகோணமலை - கிண்ணியா நகர சபை மைதானத்தில் நாளை பகல் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
    இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே சஜித் பிரேமதாச விஜயம் செய்யவுள்ளார்.
    இதில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.