• Breaking News

    பார்வையற்ற சிறுவன் திருமூர்த்திக்கு பாட வாய்ப்பு.. சொன்னதை செய்து காட்டிய இசையமைப்பாளர் இமான்



    பார்வையற்ற சிறுவன் திருமூர்த்தி டி.இமான் இசையில் பாடியுள்ளார்

    கிருஷ்ணகிரியை சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்ற சிறுவன் விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலை பாடு வீடியோ சில திணங்களுக்கு முன் வெளியாகி இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டது. இதை அறிந்த இசையமைப்பாளர் டி.இமான் அந்த சிறுவன் யார் என்ற தகவலை கேட்டறிந்து விரைவிலேயே அவரை திரைப்படத்தில் பாட வைக்க உள்ளதாக உறுதியளித்துள்ளார்.

    தற்போது அவர் சொன்னதை செய்து காட்டியுள்ளார். ஜீவா நடிப்பில் உருவாகிவரும் சீறு படத்திற்கு இசையமைத்து வருகிறார் டி இமான். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை பாடியுள்ளார் திருமூர்த்தி. பார்வதி எழுதிய வரிகளுக்கு திருமூர்த்தி குரல் கொடுத்துள்ளார். இந்த செய்தியை இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.