Ticker

6/recent/ticker-posts

இதெல்லாம் ஸ்மார்ட்போன் வாங்கும்போது யாரும் சொல்லிக்கொடுக்க மாட்டாங்க.!ஒரு ஸ்மார்ட்போனை வாங்கும் போது, அது எந்த அளவிலான ரேம் கொண்டுள்ளது.? எப்படியான கேம் கொண்டுள்ளது.? வாரன்டி என்ன.? கேரண்டி என்ன.? சர்வீஸ் சென்டர் எங்கெல்லாம் உள்ளது.? எந்த வகை சார்ஜர் கொண்டு வரும்.? ஹெட்செட் இலவசமாக வருமா.? இப்படி பல தரப்பட்ட கேள்விகளை நாம் கேட்போம்; அதற்கான பதில்களையும் ஸ்மார்ட்போன் விற்பனையாளர் பக்கத்திலிருந்து பெறுவோம். ஆனால், சில கேள்விகள் சில சமாச்சாரங்கள் மற்றும் சில தந்திரமான விடயங்களை பற்றி எந்தவொரு பயனரும் கேட்டதும் இல்லை, அதற்கு எந்தவொரு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் நிறுவனமும் பதில் அளித்ததும் இல்லை. அம்மாதிரியான சீக்ரெட் அம்சங்களை எங்களிடம் கேட்கலாம்; அதை வெளிப்படுத்துவது தான் எங்களின் முழுநேர வேலையே.!

உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் கொண்டு "இதெல்லாம்" செய்ய முடியுமென்று கூறினால் முதலில் நம்ப மாடீர்கள்; ஆனால் வழிமுறைகளை அறிந்த பின்னர் விடாமல் செய்து பார்ப்பீர்கள். லெட்ஸ் கோ.!

க்ளோனிங் ஆப்ஸ்.! 
ஆண்ட்ராய்டின் புதிய பதிப்பில், "ஆப் க்ளோனர்" என்று அழைக்கப்படும் மெனு விருப்பம் உள்ளது. இதனை கொண்டு நீங்கள் விரும்பும்ஒ ஆப்பின் ஒரு க்ளோனிங்கை, அதாவது ஒரு நகலை உருவாக்க முடியும்.

சமூக ஊடகங்களை அடிக்கடி அணுகும் மக்களுக்கு.! 
வெவ்வேறு அக்கவுண்ட்களின் வழியாக சமூக ஊடகங்களை அடிக்கடி அணுகும் மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இந்த அம்சத்திற்கு ஆதரவளிக்காத ஆண்ட்ராய்டு பதிப்பு கொண்ட பயனர்கள், குளோனிங்களுக்கான ஒரு சிறப்பு பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

யூட்யூப்பிலிருந்து வீடியோ, ஆடியோ பதிவிறக்கம்.! 
டீபால்ட் ஆகவே கூகுள் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ ஸ்டோரிலிருந்து யூட்யூப் வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கு உங்களுக்கு உதவுகின்ற பயன்பாடுகளை மறைக்கிறது. ஆனால் இலவசமாக கிடைக்கும் மூன்றாம் தரப்பு டெவெலப்பர் பயன்பாடுகள் ஏராளமாக உள்ளன.

வீடியோ, ஆடியோ பதிவிறக்கம் செய்யலாம்.! 
அதில் சில ஆப்ஸ்களுக்கு ஏற்கனவே நன்கு அறியப்பட்ட நற்பெயர் உள்ளது; மற்றவர்கள் சந்தையில் புதியவர்கள். அவை அனைத்தும் ஒரே கொள்கையுடன் இணைந்து செயல்படுகின்றன: நீங்கள் குறிப்பிட்ட வீடியோவின் இணைப்பை பேஸ்ட் செய்வதின் மூலமாகவோ அல்லது ஆப் மூலம் தேடுவதின் மூலமாகவே யூட்யூப்பிலிருந்து வீடியோ, ஆடியோ பதிவிறக்கம் செய்யலாம்.

டிஜிட்டல் ஸ்கேல்.! 
உங்கள் ஸ்மார்ட்போனை கொண்டு சில சிறிய பொருள்களை எடைபோடலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா.? ஒரு எடுத்துக்காட்டிற்கு மளிகை கடைகளில்உ வாங்கியதொரு சிறிய பொருளின்மீ எடை மீது உங்களுக்கு சந்தேகம் எழுகிறதென்றால்ய வெறுமனே இந்த பயன்பாட்டை நிறுவி, அதன் எடை சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம்.

டூ விண்டோ மோட்.! 
உங்கள் ஸ்மார்ட்போனில் இ-புத்தகம் வாசிக்கும் மறுகையில் அடிக்கடி அகராதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறதா.? அதற்காக ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட ஆப்ஸ்களை மூடி மூடி திறக்கிறீர்களா.? இனி கவலை வேண்டாம். ஒரே டிஸ்பிளேயில் இரண்டு ஸ்க்ரீனை ஓப்பன் செய்ய, மல்டி விண்டோ மோட் பயன்முறையை இயக்கவும். இதைச் செய்ய, சரியான பயன்பாட்டைத் திறந்து, டாஸ்க் லிஸ்ட் பொத்தானை அழுத்தி ஹோல்ட் செய்யவும் (அதாவது ஹோம் பொத்தானின் வலதுபுறத்தில் இருக்கும் பொத்தான்) துரதிருஷ்டவசமாக, இந்த பயன்முறை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இயங்காது.

சேஃப் மோட்.! 
இந்த பயன்முறையானது டீபக்கிங் செய்யவும், மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை அகற்றுவதற்கும் தேவைப்படும். இந்த பாதுகாப்பு பயன்முறையைச் செயல்படுத்த, உங்களின் ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட்டின் பவர் பொத்தானை அழுத்தி ஹோல்ட் செய்யவும். இப்போது வழக்கமான ஒரு மெனு தோன்றும், அதாவது ​​"ஆஃப்" அல்லது "பவர் ஆஃப்" விருப்பங்கள் காட்சிபப்டும். அதை அழுத்தி ஹோல்ட் செய்யவும் சேஃப் மோட்றை பயன்முறை தோன்றும் பின்னர் "ஓகே" என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆஃப்லைன் மேப்ஸ்.! 
ரோமிங் செய்யும் போது மொபைல் இணையத்தை பயன்படுத்துவது மிகவும் விலை உயர்ந்த ஒரு காரியமாகும். ஒருவேளை உங்களின் டேட்டா தீர்ந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் அல்ல.? இந்த நேரத்தில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவதென்பது முடியாத காரியமாகிவிடும்.

எந்த செலவு இல்லாமல்.! 
ஆக எங்கும் கிளம்பும் முன்னரே, ஆன்லைன் மேப்ஸ்களை உங்கள் போனில் பதிவிறக்கம் செய்துவிட்டு, ஜிபிஎஸ் அம்சத்தை எனேபிள் செய்த மறுகையில் மொபைல் இணையத்தை ஆப் செய்யவது தான் இதற்கு ஒரு சிறந்த தீர்வாகும். ஆம், இதைத்தான் ஆஃப்லைன் மேப்ஸ் என்பார்கள். செயற்கைக்கோள் தரவிற்கு நன்றி - இப்போது எந்த செலவு இல்லாமல், நீங்கள் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட்போன் ஸ்கேனர்.! 
உங்களுக்கு தெரியுமா.? உங்கள்போ ஸ்மார்ட்போன் கேமரா உதவியுடன் எந்தவொரு ஆவணத்தையும் அல்லது புகைப்படத்தையும் நீங்கள் ஸ்கேன் செய்ய முடியும். இந்த அம்சத்தின் முழுப்பயனையும் பெற, உங்களின் ரகசியமான ஆவணங்களை அங்கீகரிக்க முடியாத திறன் கொண்ட ஒரு ஆப்பை நீங்கள் பதிவிறக்க வேண்டும்.

அன்லிமிடெட் தேடல்.! 
கூகுள் கோகில்ஸ் எனும் பயன்பாடு மூலம், நீங்கள் விரும்பும் எதையும் தேடலாம், கண்டுபிடிக்கலாம். இந்த பயன்பாட்டின் தனித்துவம் என்னவெனில், இதில் உங்கள் தேடல் வினவல்களை தட்டச்சு செய்வதற்கு பதிலாக, உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் நீங்கள் காட்சிப்படுத்தும் பொருட்களுக்கான அளவிலாத தேடலை நிகழ்த்தலாம்.

ஸ்மார்ட்போன் டூ ஸ்மார்ட்போன்.! 
முதலில் ஒன்-டச்-கோ (OTG) செயல்பாட்டிற்கு நன்றி. இதனை கொண்டு எந்தவொரு ஸ்மார்ட்போனையும் மற்றொரு நவீன சாதனத்துடன் இணைக்க முடியும், மற்றொரு ஸ்மார்ட்போன் உட்பட. ஆம், இந்த செயல்முறைக்கு ஒரு ஸ்மார்ட்போன் ஆனது யூஎஸ்பி பீமேல் அடாப்டர் கொண்டும் மற்றொரு ஸ்மார்ட்போன் ஒரு மைக்ரோ- யூஎஸ்பி கேபிள் கொண்டும் இணைந்திருக்க வேண்டும்.