• Breaking News

    ஓய்வூதிய முரண்பாடுகளில் 80 வீதமானவை பூர்த்தி


    கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற ஓய்வூதிய 5,750,00 ஓய்வூதிய முரண்பாடுகளில் 80 வீதமானவை இதுவரை தீர்க்கப்பட்டுள்ளன என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
    இம்மாத இறுதிக்குள் எஞ்சியிருக்கும் முரண்பாடுகளும் தீர்க்குமாறு என்று அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
    அரச நிர்வாக சுற்றுநிரூபம் 14/2019 இற்கு அமைய சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் தொடக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
    தற்போது முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு 115,000 மட்டுமே வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
    இலங்கையில் சுமார் 6,350,00 பேர் ஓய்வூதியம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது