Ticker

6/recent/ticker-posts

இன்று ஒரே நாளில் 7 பிரச்சாரக் கூட்டங்களில் சஜித்..!! விரைவில் நாடு முழுவதிலும் சூறாவளிப் பிரச்சாரம்..!!


புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ஏழு பொது கூட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முதலாவது கூட்டம் தரணியகலையில் இன்று காலை 9மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு ருவன்வெல்லயிலும், பிற்பகல் 2.30 மணிக்கு அத்தனகல்லை தொகுதியிலும், பிற்பகல் 3 மணிக்கு மீரிகமயிலும், பிற்பகல் 4 மணிக்கு தம்பதெனியவிலும், இரவு 7.30 மணிக்கு குருணாகலையிலும் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், இன்று காலை 11மணிக்கு ருவன்வெல்லயில் நடைபெறவுள்ள தமிழ் முற்போக்கு குழுவினால் நடாத்தப்படவுள்ள மாநாட்டிலும் சஜித் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புதிய ஜனநாயக தேசிய முன்னனியைப் போன்று பொதுஜன பெரமுனவும் மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்வதற்கு கடுமையான தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.