• Breaking News

    மலச்சிக்கலை போக்கும் 6 எண்ணெய் வகைகள்.. உங்கள் வீட்டில் இருக்கிறதா..?

     
     மலச்சிக்கல் என்பது பொதுவான அஜீரணக் கோளாறு. சிறு வயது முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இந்த சிக்கல் வரும். மலச்சிக்கல் பயப்படக் கூடியது இல்லை என்றாலும் கவனித்து சரி செய்வது அவசியம். இதனால் கண்டு கொள்ளாமல் விட்டாலும் உடல் உபாதைகள் வரும். கழிவுகள் வெளியேறவில்லை எனில் அசௌகரிய உணர்வு, எரிச்சல், வயிறு மந்தம் போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதற்கு உடனடி தீர்வாக இந்த எண்ணெய்களை பயன்படுத்துங்கள். அவசர காலத்திற்கு உதவும் இந்த எண்ணெய்களை வீட்டில் எப்போதும் வைத்திருங்கள்.

    இஞ்சி எண்ணெய் : உணவுக்கும் இஞ்சி எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. சூடான தண்ணீரில் இரண்டு சொட்டு இஞ்சி எண்ணெய் விட்டுக் கலக்குங்கள். அதில் காட்டன் துணியை முக்கி தண்ணீரை இறுத்துவிடுங்கள். படுத்துக்கொண்டு அந்த டவலை அடி வயிற்றில் வைத்து 15 நிமிடங்கள் காத்திருந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். 2 - 3 நிமிடங்கள் கடிகார சுழற்சி முறையில் மசாஜ் செய்யலாம்.

    பெப்பர் மிண்ட் எண்ணெய் : வெறும் வயிற்றில் பெப்பர் மிண்ட் எண்ணெயை வெதுவெதுப்பான நீரில் கலந்து ஒரு கிளாஸ் குடித்து வர மலச்சிக்கல் பிரச்னை இருக்காது. இது குளுர்ச்சியானது என்பதால் உடல் வலிக்கும் நல்லது. இதனால் மலச்சிக்கலும் இலகுவாகும்.

    மஞ்சள் எண்ணெய் : இதுவும் சமையலுக்குப் பயன்படுத்தப்படுவதே..அப்படி இல்லை எனில்..தினமும் சாப்பிடும் உணவில் சிறிதளவு ஊற்றி சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னையே இருக்காது. ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.


    வெந்தைய எண்ணெய் : தேங்காய் எண்ணெயுடன் இரண்டு சொட்டு வெந்தைய எண்ணெய் சேர்த்து அடி வயிற்றில் மசாஜ் செய்தால் வயிறு இலகுவாகி மலச்சிக்கல் நீங்கும்.

    எலுமிச்சை எண்ணெய் : எலுமிச்சை எண்ணெய் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். எலுமிச்சை எண்ணெய்யை கைகளில் சூடு பறக்க தேய்த்தால் வயிறு இலகுவாகும். மலச்சிக்கலும் இருக்காது.

    விளக்கெண்ணெய் : விளக்கெண்ணையை காய்ச்சி அதை அடி வயிற்றில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடங்கள் படுத்திருந்தால் வயிறு இறுக்கமாக கல்போல் இருந்தாலும் இலகி மலச்சிக்கல் பிரச்னையை போக்கிவிடும்.